தேவையான பொருட்கள்
- கம்பு - 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- கம்பை சுத்தம் செய்து லேசாக நீர் தெளித்து ரவை போல கொரகொரப்பாக அரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை வைத்து கொதிக்க விடவும்.
- அரைத்த கம்பை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
- கொதிக்கும் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் கம்பை ஊற்றி கிளறவும்.
- சில நிமிடங்களில் கம்பு வெந்துவிடும்
- அதில் தயிர் கலந்து சாப்பிடலாம். வயிற்றிற்கு நல்ல குளிர்ச்சியை தரும். துவையல் இதற்கு பொருத்தமாக இருக்கும்.