கரும்பு
மித வெப்பமண்டல தாவரமான
கரும்பு சர்க்கரைக்காகவும், பிற தேவைகளுக்காகவும் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பயிரிடப்படுகிறது. கரும்பு உற்பத்தியில் பிரேசில்தான்
உலகத்திலேயே முதன்மையான நாடாக விளங்குகிறது. கரும்புச்சாறு,
சர்க்கரை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டது.
குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது
குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது
.
எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. கரும்புச்சாறு பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரியவரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது
செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது.ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட எல்லோருக்குமான சிறந்த ஒன்றாக இருக்கும்.
செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது.ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட எல்லோருக்குமான சிறந்த ஒன்றாக இருக்கும்.
கரும்பும் அதன் பயன்களும்....
கரும்பில் நம் உடலுக்குத் தேவையான அளவு
கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.
கரும்பு சாப்பிடுவதன் மூலம் பற்கள் உறுதி அடைகின்றன.அதனால் கரும்பை, சிறுவர்கள் மென்றே சாப்பிடலாம். இதனால் பற்கள் உறுதிபெறும். பல்லால் கடித்து மென்று சாப்பிட முடியாதவர்கள் சாறாக அருந்தலாம்
மஞ்சள் காமாலை நோய்க்குக் கரும்புச் சாறு அருந்தச் சொல்வது தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. ‘கரும்பு கசத்தால் வாய்க்குற்றம்’ எனும் வழக்கு மொழியே உண்டு. அதாவது, கரும்புச் சாறு இனிப்பாக இருக்க, அதைச் சுவைக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் செரிமான சுரப்புகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பொருள். பெரும்பான்மையான செரிமானச் சுரப்புக்கள் சுரக்க, கல்லீரலே முதல் காரணமாய் இருக்கும்.
கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானச் சுரப்புக்கள் நன்கு
சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.
சளி, காய்ச்சல் வராமல் பாதுகாக்க உதவுகிறது.உடல் சூட்டை தணிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. கரும்பிலுள்ள மினரல்கள் பற்சொத்தை, வாய் துர்நாற்றத்தை தடுக்கின்றன.
சிறுநீரக கற்களை கரையச் செய்கிறது. அஜீரணக் கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கலை நீக்குகிறது. உடல் அமிலத்தன்மையை சமன் செய்து, குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கரும்பு சாப்பிடுவதில் பிரச்சனை ஏதுமில்லை. ஏனெனில் கரும்பில் குளுக்கோஸின் அளவு குறைவாக இருப்பதால், ரத்தத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வெயில் காலங்களில் ஏற்படும் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி தருகிறது.