-->

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

மகம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : மகம்
மகம் நட்சத்திரத்தின் ராசி : சிம்மம்
மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது
மகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 சூரியன்

மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழமொழி உண்டு. ஆனால் மகத்தில் பிறந்த எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. இவர்கள் எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். தங்களின் தனிபட்ட விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள். வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். உண்மை பேசுவதையே குறிகோளாக கொண்டவர்கள். தான் செய்தது தவறு என மனதிற்கு பட்டால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். 

எப்பொழுதும் பம்பரம் போல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமிருக்கும். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். இவர்களிடம் நல்ல நிர்வாக திறமை இருக்கும்.

இவர்களுக்கு உடல் ஆரோக்யத்தில் மிகுந்த அக்கறை இருக்கும். பிரயனங்களில் அதிக விருப்பம் இருக்கும். மற்றவர்களை கௌரவமாக நடத்துவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள்.

மகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சிவந்த மேனியை கொண்டிருப்பார்கள். சொத்துக்கள் சேர்ப்பதில் விருப்பம் உள்ளவர். பிறரை தான் பால் கவர்ந்து இழுக்கும் வசீகர தன்மை கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசபடகூடியவர்கள்.

மகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு இரக்கக் குணமும், பிறரை உதவும் தன்மையும் அதிகம் இருக்கும். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். எப்பொழுதும் சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.

மகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பலசாலிகளாக இருப்பார்கள். பேராசை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். எடுத்த காரியத்தை முடிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள்.

மகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். ஆடம்பரமாக இருக்க ஆசைப்படுவார்கள். எதிலும் தான் முதலில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். உதவி செய்தவர்களை எளிதில் மறந்து விடுவார்கள்.

Previous Post Next Post