நட்சத்திரம் : மிருகசிரிஷம்
மிருகசிரிஷம் நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் மற்றும் மிதுனம்
மிருகசிரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
மிருகசிரிஷம் நட்சத்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாத ராசி அதிபதி (ரிஷபம்) : சுக்கிரன்
மிருகசிரிஷம் நட்சத்திரம் மூன்று மற்றும் நான்காம் பாத ராசி அதிபதி (மிதுனம்) : புதன்

மிருகசிரிஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணிவாகவும், யாருக்கும் பயப்படாத குணமுடனும் இருப்பார்கள். யாரையும்
சார்ந்து இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக்
கொண்டேயிருப்பார்கள்.
யார் சொல்லுக்கும்
கட்டுப்பட மாட்டார்கள். எல்லாவற்றையும் தன் சுய சிந்தனையோடு செய்து முடிப்பார்கள்.
இவர்களுக்கு அபார நினைவாற்றல் இருக்கும்.
இவர்களுக்கு முன் கோபம் அதிகமிருக்கும். தேவையான இடத்தில தாழ்ந்தும் போவார்கள். தன்
கண்முன் நடக்கும் தவறை பயமில்லாமல் தட்டி கேட்கும் தைரியம் கொண்டவர்கள்.
இவர்களுக்கு விட்டு கொடுக்கும் பண்பு குறைவு. உற்சாகமாக தனது பணிகளை செய்வார்கள்.
இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். தனக்கென ஒரு தனி வழியை
உருவாக்கி கொண்டு நடப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எல்லாவற்றையும்
எளிதாக எடுத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்கள்.
மிருகசிரிஷம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :
தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனபோக்கை கொண்டவர்கள். பிறருக்கு
கஷ்டமாக இருக்கும் காரியத்தையும் எளிதில் முடிப்பவர்கள். இவர்கள் பருமனான உடல்
வாகை கொண்டவர்கள். மிகுந்த கோபம் உடையவர்.
மிருகசிரிஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்:
இவர்கள் வாதம் செய்வதில் வல்லவர்கள். பிறருக்கு நன்றாக உபதேசம்
செய்வார்கள். உண்மை பேசுவதில் குறியாக இருப்பார்கள். இவர்கள் ஆணாக இருந்தால்
பெண்கள் மேல் அதிக ஈர்ப்பு இருக்கும். இவர்களுக்கு நல்ல கல்வியறிவும், தெய்வ
பக்தியும் இருக்கும்.
மிருகசிரிஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்:
இவர்கள் உயர்ந்த குணம் உடையவர்களாக இருப்பார்கள். வசீகரமான தோற்றம்
கொண்டவர்கள். ஆடை, அணிகலன்கள் மேல் அதிக ஆர்வம் இருக்கும். ஆசாரங்களை மதித்து
நடப்பார்கள்.
மிருகசிரிஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்:
எதையும் துணிச்சலாக செய்வார்கள். பிடிவாத குணம் அதிகம் இருக்கும்.
தானம், தர்மம் செய்வதில் விருப்பம் உடையவர். முடிந்தவரை உண்மை பேச வேண்டும் என
நினைபவர்கள்.
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்