மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க
ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காய் என்றதும் நம் நினைவுக்குவருவது அதன்
சுவையும், கண்ணைக் கவரும் பச்சை நிறமும்தான்.
நெல்லிக்காய் துவர்ப்பு, புளிப்புச் சுவை நிறைந்தது.ஆனால் சுவையையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள் அதிகம்.அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக்
கொண்டாடினார்கள்.
நெல்லிக்காய் அனைவருக்கும் பிடித்த ஒன்று இதில்
சின்ன நெல்லி,பெரிய நெல்லி என இரு வகைகள் உண்டு.நெல்லிக்காய் சிறந்த மருத்துவ குணம் நிறைந்த
ஒரு பழமாகும்.தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் மரணத்தை கூட தள்ளி
போடலாம் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.
நெல்லிக்காயின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்....
ஒரு மனிதனுக்கு தினசரி 50 மில்லி கிராம் அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை தினமும் நெல்லிக்கனி
சாப்பிடுவதன் மூலமாக எளிதில் பெற முடிகிறது.
நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை
சுலபமாகக் கரைத்திடும்.நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டராலை குறைக்க நெல்லிக்காய் ஒரு
சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில்
நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை
நீக்கி, உடல் எடையை குறைத்து ஆரோக்கியக்கியமாக இருக்க
உதவுகிறது.
நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய்
ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது
எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவி விடவும்.இவ்வாறு செய்வதன் மூலம் கூந்தல்
விரைவில் கருமையாக மாறுவதை பார்க்கலாம்.
நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட,
ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும்.முடி உதிரும்
பிரச்சனையை குறைத்து ,நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர ஆரம்பிக்கும்.
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கண் பார்வை கூர்மையாகும்.
நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்
கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது. இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.