பிரண்டை
நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக நீண்ட
நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள
பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் பிரண்டை.
பிரண்டை பொதுவாக வெப்பமான
இடங்களில் வளர கூடிய தாவரமாகும். கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.
சதைப்பற்றான நாற்கோண
வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான
இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற
உருண்டையான சிறியசதைக் கனியுடையது.விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இரு வகைப்படும்.
பெண் பிரண்டையின் கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண் பிரண்டையின்
கணு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள்
முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டையே நாம் அதிகமாக பயன்படுத்தும் பிரண்டை ஆகும்.
வேலிகளின் ஓரங்களிலும், புதர்களின் நடுவிலும்
சாட்டை சாட்டையாக பரந்து வளர்ந்து விரிந்திருக்கிற பிரண்டையை எல்லோருமே
பார்த்திருப்போம். அது பல மருத்துவக் குணங்களை உள்ளடக்கிய
அற்புதமான மூலிகைச் செடி என்பதுதான் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
பிரண்டையின் மருத்துவ குணங்களும் அதன்
பயன்களும்.....
பிரண்டையை துவையல், குழம்பு, தோசை என்று பலவிதத்தில்
பயன்படுத்தி நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.பிரண்டை கலோரி குறைந்த
எளிதில் ஜீரணிக்கக்கூடிய, நார்ச்சத்து,
கால்சியம், மெக்னீசியம் நிறைந்த ஒரு மருத்துவ பண்புள்ள தாவரம் ஆகும்.
எடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு
வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை
பராமரித்து அதிக கொழுப்பைக் கரைக்கிறது. இதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது.
பிரண்டையின் சாறு உடலில் பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும்
தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.
பிரண்டை உடலைத் தேற்றும், பசியைத் தூண்டும், மாதவிலக்கைத் தூண்டும், மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக்
குணமாக்கும்.
பிரண்டையை துவையல் உடல் சுறுசுறுப்பை
அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை பெருக்கும், மூளை நரம்புகளை பலப்படுத்தும்.எலும்புகளுக்கு சக்தி தரும்.
ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்.
இதனை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு
வந்தால் உடல் வலுப்பெறும்.மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால்,
வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும்.
எலும்பு முறிவு மற்றும் அடிபட்ட வீக்கம்,
சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள்,
ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக
நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன்
சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம்
குணமாகும்.
மேலும் வயிற்றுப் பூச்சிகளையும்
கட்டுப்படுத்தும்.இரத்த ஓட்டம் சீராகும். இதயம் பலப்படும். பெண்களுக்கு
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்தாக உள்ளது.