.தேவையான
பொருட்கள்:
- மட்டன் – 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)
- தக்காளி – 2 (அரைத்தது)
- வெங்காயம் – 2 (அரைத்தது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- தயிர் – 1 கப்
- கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- பட்டை மற்றும் கிராம்பு பொடி – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
செய்முறை:
- முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு மிதமான தீயில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- பின்னர் தீயை குறைத்து வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
- பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.