தக்காளி
ஒருவரின் வெளிதோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை
கணக்கிட கூடாது என்றாலும், பெருன்பான்மையானவர்கள் பிறரின் முக அழகு, சரும நிறம் ஆகியவற்றை வைத்துதான் மக்களை எடை போடுகிறார்கள்.
யாருமே பிறக்கும் போது சரும பிரச்சனைகளுடன்
பிறப்பதில்லை. சொல்லப்போனால் பழங்காலத்தை விட இக்காலத்தில் தான் அதிக சரும
பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதற்கு மோசமான சுற்றுச்சூழல் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும்,
ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.
பெண்களுக்கான அழகு பொருட்களை பொருத்தவரை அதிகமாக
விற்பனை ஆவது சரும நிறத்தை சிகப்பாக்கும் முக பூச்சுகள்தான்.
தக்காளிப் பழத்தால்
எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் ஜொலிக்க
வைத்து விடலாம். தக்காளியனாது முகச்சுருக்கத்தை
விரட்டி இளமைனவராக மாற்றி விடும்.
நீண்ட நாட்களாக முகத்தை
சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து
விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து
கொள்ளுங்கள்.
இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள்.
தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.
சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை
குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து
கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.இதை
முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென
ஜொலிக்கும்.
சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம்
தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக
மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.
ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் கலவையைப்பூசி 2
நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே
கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு
கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில்
கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும்.
இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.
தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை
இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வெயிலில் அதிகம்
சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா? அப்படியெனில்
தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15
நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில்
நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ
வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
.