தேன்
நம் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் தொட்டு, பாட்டி வைத்தியம் உட்பட அனைத்து பாரம்பரிய மருத்துவ முறைகளிலும்,
தேனுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
தேன் நினைத்தாலே
இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய ஓர் அற்புத உணவு. தேனில்
நம் உடலுக்கு தேவையான எழுபது வகையான சத்துகளும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது.
கொம்புத்தேன்,
மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு வகையான தேன்கள் உள்ளன.
நாம் சாப்பிடும்
உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இரவில்
தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.
தேனில் உள்ள
சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம்
செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.
இரவில் சிறு நீர்
போகும் குழந்தைகளுக்கு குழந்தை தூங்கும் முன்பு ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால் சில
நாட்களில் சரியாகும்.
மருந்துகளைத்தேன்
கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு
விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும்.
அரை கிராம்
கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த
ஆஸ்துமா குணமாகும்.
ஒரு தேக்கரண்டி
அளவு பூண்டு சாறுடன் இரண்டு கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை மற்றும் மாலை) சாப்பிடுவது இரத்த
கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இருதயம் பலப்படவும், இரத்த ஓட்டத்தை சமன் செய்யவும் , கொலஸ்டிரால்
குறையவும் தினசரி தேன் மிக உதவியாக இருக்கிறது.
உடல் பருமனால்
அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஒரு
டீஸ்பூன் தேனை இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் இது
வயிற்றில் உள்ள கொழுப்புக்களை முற்றிலும் கரைத்து, கொழுப்பை உட்கொள்ளும் அளவைக் குறைக்கும்.