-->

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

திருவாதிரை நட்சத்திரம் வாழ்க்கை முறை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தின் ராசி :  மிதுனம்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
திருவாதிரை நட்சத்திரத்தின் ராசி அதிபதி :  புதன்

திருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இது பகவான் நடராஜர் அவதரித்த நட்சத்திரமாகும். இவர்களுக்கு கோபமும், முரட்டு தனமும் அதிகம் இருக்கும். இவர்கள் சரியான காரியவாதிகள். சந்தர்பத்திற்கு ஏற்றவாறு பேச்சை மாற்றி மாற்றி பேசுவார்கள். இவர்கள் சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விட மாட்டார்கள்.

சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமப்பார்கள். உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்கு காம வேட்கை அதிகம் இருக்கும். தற்பெருமை அதிகம் கொண்டவர்கள். அவசர அவசரமாக காரியங்களை செய்வார்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வார்கள்.

இவர்கள் பிரதிபலன் பாராமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். இவர்கள் சேமித்து வாழ வேண்டும் என விரும்புவார்கள். எல்லாவற்றையும் முன்னின்று நடத்தும் விருப்பமுடையவர்.

திருவாதிரை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் கலகலப்பாக பேசுவதில் வல்லவர்கள். நல்ல குணங்களை தன்னுளே கொண்டவர்கள். கோவம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். இவர்களிடம் கோவமும், குணமும், சேர்ந்தே இருக்கும்.

திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் பேசுவதில் கெட்டிகாரர்கள். மற்றவரின் சொல்லுக்கு கட்டுபடாமல் தர்க்கம் புரிவர். மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.

திருவாதிரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் மிகவும் முரட்டு பிடிவாதம் கொண்டவர்கள். தற்புகழ்ச்சியை அதிகம் விரும்புவார்கள். எதிலும் நிதானம் இல்லாமல் அவசரமாக முடிவெடுப்பார்கள். அவசர முடிவு எடுத்து விட்டு பின்பு அதற்காக வருந்துவார்கள்.

திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் அழகான உடல் வாகை கொண்டவர்கள். சிறந்த விவேகம் உடையவர். இவர்களிடம் பக்தியும், தர்மசிந்தனையும் அதிகம் இருக்கும். பொது வாழ்வில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உறவினரின் பகையை அதிகம் சம்பாதிப்பார்கள்.


மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும் 

Previous Post Next Post