கொள்ளின்
மருத்துவ குணங்களும் அதன் பயன்களும் .......
'கொழுத்தவனுக்கு கொள்ளு.. இளைத்தவனுக்கு எள்ளு..' என்பது
பழமொழி. உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான பங்குண்டு.
தைராய்டு சுரப்பி
சரியான முறையில் வேலை செய்யாததால் எடை கூடும். சரியான வகையில் உடல் உழைப்பு தேவை.
வீட்டு வேலைக்கு இயந்திரங்களை பயன்படுத்துவது, உணவு முறையில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றால்
உடல் எடை அதிகமாகிறது. எனவே, நேரத்துக்கு உணவு
சாப்பிட வேண்டும்.
எண்ணெய் உணவுகளை
தவிர்க்க வேண்டும். கொள்ளுவை பயன்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கான மருந்து
தயாரிக்கலாம்
அருமையான
மருத்துவ குணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல்
வளர்ச்சிக்கும், திசுக்கள்
முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த
திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
கொள்ளுவை நம் தினசரி
உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் எளிதில்
குறைக்க முடியும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில்
ஊறவைத்து, காலையில் வெறும்
வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற
கொழுப்புகள் குறையும்.
கொள்ளை ரசமாகவோ,
துவையலாகவோ செய்து
சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால், கொள்ளு சூப் வைத்து சுடச்சுட சாப்பிட்டால்
இரண்டே நாட்களில் சளி, காய்ச்சல்,
மூக்கடைப்பு
பறந்துபோகும்.
புரதம் நிறைந்த
கொள்ளு தானியம், உடல்
வளர்ச்சிக்கும், திசுக்கள்
முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த
திசுக்களை சரி பார்க்கவும் உதவுகிறது
கொள்ளுப் பருப்பை
இரவில் ஊற வைத்து, அந்த நீரை
மறுநாள் காலை வெறும்வயிற்றில் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதேபோல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் குறைக்கும். கொள்ளுப் பருப்பை ஊற
வைத்தும், வறுத்தும்
சாப்பிடலாம்.
பெண்களுக்கு
ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதவிடாயையும் சீர்படுத்தும். கொள்ளும்
அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
உடலில் உள்ள
எலும்புக்கும், நரம்புக்கும்
வலுவூட்டும் சக்தி கொள்ளு பருப்புக்கு உண்டு. கடினமான பணிகளில் ஈடுபடுபவர்கள்
கொள்ளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
கொள்ளு பருப்பை
ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்கு பதிலாக) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக
இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது
பயன்படுத்தலாம்
உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.
இது,
உடல் உறுப்புகளை பலம் பெற
வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.
இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும். உடல் வலுவாகும்.
கொள்ளு
ஆன்டி-ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது. கொள்ளை
ஊற வைத்து ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.