உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
நட்சத்திரம் : உத்திரம்
உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திரம் நட்சத்திரம் முதல் பாத ராசி அதிபதி (சிம்மம்) : சூரியன்
உத்திரம் நட்சத்திரம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாத ராசி அதிபதி (கன்னி) : புதன்
உத்திரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மற்றும் கன்னி
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்
உத்திரம் நட்சத்திரம் முதல் பாத ராசி அதிபதி (சிம்மம்) : சூரியன்
உத்திரம் நட்சத்திரம் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாத ராசி அதிபதி (கன்னி) : புதன்
உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
உத்திரம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த மன வலிமையும், உண்மையே பேசும் சுபாவமும் இருக்கும். இவர்கள் பலவித கல்வி
கேள்விகளில் சிறந்தவராக இருப்பார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே கம்பீரமான நடையும்,
பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும்.
இவர்களுக்கு அனைவரையும்
கவரக் கூடிய பேச்சாற்றல் இருக்கும். தனக்கு தவறென பட்டால் நேரடியாக கேட்க
கூடியவர்கள். இவர்களுக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகமிருக்கும். கடவுள்
நம்பிக்கை அதிகம் இருக்கும். சிக்கனமாக இருப்பதில் விருப்பமுள்ளவர்கள். சுயமரியாதை
அதிகம் உடையவர்கள்.
சுத்தத்திற்கு
முக்கியத்துவம் கொடுப்பார்கள். திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவர்கள்.
உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்பாக பழகுவார்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவார்கள்.
நன்றியுணர்வு அதிகம் கொண்டவர்கள்.
உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் பிறர் விரும்பும் வகையில்
இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். கடுமையான உழைப்பாளிகள். எளிதில் உணர்ச்சி வசப்பட
கூடியவர்கள். பெற்றார்களிடமும், சகோதரர்களிடமும் பாசம் உள்ளவர்கள். கண்ணியமாக
இருக்க விரும்புவர்.
உத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :
இவர்கள் பொன்னும், பொருளும்
சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம்
இருக்கும். இவர்களிடம் சுயநலம் இருக்கும். எதிலும் அவசரமாக முடிவெடுத்து விட்டு
பின்னர் வருத்தபடுவார்கள்.
உத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்:
இவர்களிடம் கர்வம் அதிகம்
இருக்கும். தான் என்ற அகங்காரம் அதிகம் இருக்கும். ஒரு செயலில் வெற்றி பெறுவதற்காக
எதையும் செய்ய துணிந்தவர்கள்.
உத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்:
மற்ற ராசிகளின் பொதுவான குணங்களை இங்கே கிளிக் செய்வதன்மூலம் காணலாம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.