தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில்
உருவானது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை
மரத்தின் அனைத்து பாகங்களான பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என அனைத்து பகுதிகளும் மருத்துவத்தில் சிறப்பாக
பயன்படுகிறது.எனவே, இது பூரண
மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது.
தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு பண்டைய காலத்தில் அன்றாடம்
இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக
முக்கிய தாவரம் வாழை ஆகும்.
வாழையின்
அனைத்து பாகங்களும் உடலின் வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து,
விட்டமின் A, விட்டமின் C போன்ற சத்துகள் இருப்பதால், வாழைத்தண்டை
ஜூஸ் மற்றும் சமைத்து சாப்பிடலாம்.
இன்று நாம் உண்ணும் உணவு அதிக மசாலா சேர்க்கப்பட்டு காரமான உணவாகவும்
வறட்சியான உணவாகவும் இருக்கிறது. இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த
குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர்.
மது, புகை
போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம்
குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள்
உண்டாகின்றன.
அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும்
சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதனை சரி செய்வதர்க்கான ஓர் சிறந்த மருந்தாக
வாழைத்தண்டு பயன்படுகிறது. மருத்துவ உலகில் மிக முக்கிய ஒன்றாக திகழ்கிறது.
வாழைத்தண்டின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும்...
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம்
வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ
சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறது..
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான
உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம்,அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர்
தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும்
இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை அதிகம் உண்டு.
வாழைத்தண்டில்
நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு
டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல்
இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள்
உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம்
மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இரைப்பையில்
அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண,
காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில்
கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது
மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும்
ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில்
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும்.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.