ஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க கூடிய ஒரு
கலையாகும். உலகின் பல்வேறு பகுதியிலும் வாழும் மக்களில் பெரும்பாலோனோர் வயது,
படிப்பு, அறிவு வித்தியாசமின்றி இதனை நம்புகிறார்கள். சோதிடத்துக்கு எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை.
கோள்களின் நகர்வுகளை கொண்டு ஒருவர் பிறக்கும் போது என்ன ராசி, நட்சத்திரம்,
யோகம், லக்னம் ஆகியவை கணிக்கபடுகிறது. இது எல்லா மக்களாலும் ஏற்று
கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளை நமது முன்னோர்கள்
ஓலைசுவடிகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். அவற்றை பின்பற்றி எவ்விதமான தீங்குகளில்
இருந்தும் நம்மை காப்பாற்றி கொள்ள முன்னோர்கள் வகுத்து சொன்ன கலையே ஜோதிட
கலையாகும்.
ஜோதிடதுக்கும், அன்மீகதுக்கும் மிகுந்த நெருக்கம்
உண்டு. நமக்கு வரும் தீங்குகளில் இருந்து நம்மை காப்பாற்றி நல்வழி படுத்தி இறைவனிடம்
நம்மை சேர்ப்பதில் ஜோதிடம் பெரிதும் உதவுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும்,
அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை
உண்டாக்குகின்றன என்னும் மைய கருத்தே சோதிட நூலின் அடிப்படையாகும். அவற்றை
பின்வரும் விளக்கங்கள் மூலம் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் மாதங்கள்
பனிரெண்டு தமிழ் மாதங்களை கொண்டது தமிழ் ஜோதிடம். சித்திரை மாதம்தான் முதல்
தமிழ் மாதமாக அழைக்கபடுகிறது. இந்த சித்திரை மாதமானது ஆங்கில மாதமான ஏப்ரல் 14ம் தேதி தொடங்குகிறது. பனிரெண்டு தமிழ் மாதங்களின்
பெயர்கள் பின்வருமாறு:
1.
சித்திரை
2.
வைகாசி
3.
ஆணி
4.
ஆடி
5.
ஆவணி
6.
புரட்டாசி
7.
ஐப்பசி
8.
கார்த்திகை
9.
மார்கழி
10.
தை
11.
மாசி
12.
பங்குனி
தமிழ் வருடங்கள்
சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை முடியும் ஒவ்வொரு தமிழ்
வருடமும் ஒரு பெயரால் அழைக்கப்படும். தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. இதன்படி
முதலில் வரும் முதல் வருடத்தின் பெயர் பிரபவ. கடைசி வருடத்தின் பெயர் க்ஷய.
6௦
வருடங்கள் முடிந்தபின் மீண்டும் பிரபவ வருடத்தில் இருந்து சுழற்சி ஆரம்பிக்கும். 6௦
வருடங்களின் பெயர்கள் பின்வருமாறு,
1.
பிரபவ
2.
விபவ
3.
சுக்ல
4.
ப்ரமோத
5.
ப்ரஜோத்பத்தி
6.
ஆங்கிரஸ
7.
ஸ்ரீமுக
8.
பவ
9.
யுவ
10.
தாத்ரு
11.
ஈசுவர
12.
பஹுதான்ய
13.
ப்ரமாதி
14.
விக்ரம
15.
வ்ருஸ
16.
சித்ரபானு
17.
சுபானு
18.
தாரண
19.
பார்த்திவ
20.
வ்யய
21.
ஸர்வஜித்
22.
ஸர்வதாரி
23.
விரோதி
24.
விக்ருதி
25.
கர
26.
நந்தன
27.
விஜய
28.
ஜய
29.
மன்மத
30.
துர்முகி
31.
ஹேமலம்ப
32.
விளம்பி
33.
விகாரி
34.
ஸார்வரி
35.
ப்லவ
36.
சுபக்ருத
37.
சோபக்ருத்
38.
க்ரோதி
39.
விசுவாவஸு
40.
பராபவ
41.
ப்லவங்க
42.
கீலக
43.
ஸௌம்ய
44.
ஸாதாரண
45.
விரோதக்ருத்
46.
பரிதாவி
47.
ப்ரமாதீச
48.
ஆனந்த
49.
ராக்ஷஸ
50.
அநல
51.
பிங்கல
52.
காளயுக்த
53.
ஸித்தார்த்த
54.
ரௌத்ர
55.
துர்மதி
56.
துந்துபி
57.
ருத்ரோத்காரி
58.
ரக்தாக்ஷ
59.
குரோதன
60.
க்ஷய
ஒன்பது கோள்கள்
தமிழ் ஜோதிடத்தில் மொத்தம் ஒன்பது கோள்கள் குறிப்பிடபடுகின்றன. இந்த
ஒன்பது கோள்களை வைத்தே தமிழ் ஜோதிடம் கணிக்கப்படுகிறது.
1. சூரியன்
2. சந்திரன்
3. குரு
4. செவ்வாய்
5. புதன்
6. சுக்ரன்
7. சனி
8. ராகு
9. கேது
மேற்சொன்ன ஒன்பது கிரகங்களையும் நாம் பொதுவாக நவக்கிரகங்கள் என்று
அழைக்கிறோம்.
நட்சத்திரங்கள்
நம்முடைய தமிழ் ஜோதிடம் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்தே
கணக்கிடப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் சூரியனை மையமாக வைத்து ஜோதிடம் பார்க்கப்படுகிறது.
நமது வளி மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களை சந்திரன் கடந்து செல்லும் கணக்கை வைத்தே தமிழ்
ஜோதிடம் கணிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ராசிக்கும் 4 பாதங்கள் உள்ளன. ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இந்த 27 நட்சத்திரங்களில்
உள்ள நான்கு பாதங்களில் எதாவது ஒன்றில் தான் பிறக்கின்றான். அந்த நட்சத்திர பலன்களை காணலாம். அந்த
நட்சத்திரங்கள் பின்வருமாறு,
அஸ்வினி
|
மகம்
|
மூலம்
|
பரணி
|
பூரம்
|
பூராடம்
|
கிருத்திகை
|
உத்திரம்
|
உத்திராடம்
|
ரோகினி
|
ஹஸ்தம்
|
திருவோணம்
|
மிருகசிரிஷம்
|
சித்திரை
|
அவிட்டம்
|
திருவாதிரை
|
சுவாதி
|
சதயம்
|
புனர்பூசம்
|
விசாகம்
|
பூரட்டாதி
|
பூசம்
|
அனுஷம்
|
உத்திரட்டாதி
|
ஆயில்யம்
|
கேட்டை
|
ரேவதி
|
ராசிகள்
நாம் பிறந்த நேரத்தை அடிப்படையாக வைத்து ராசிகள் கணிக்கப்படுகின்றன, அந்த ராசிகளின் பொதுவான பலன்களை காணலாம். அந்த நட்சத்திரங்கள் பின்வருமாறு,
1. மேஷம்
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. விருச்சிகம்
8. துலாம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
மேலே குறிப்பட்ட ராசியில் கிளிக் செய்வதின் மூலம் அந்த ராசியை பற்றி விரிவாக
அறிந்து கொள்ளலாம்.
லக்னம்
ஒருவரிடம் உங்களுடைய ராசி எதுவென கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்.
ஆனால் லக்னம் என்னவென்று கேட்டல் திணறுவார்கள். ஒரு ஜாதகத்தில் ராசி என்பது உடல்
போலதான். ஆனால் லக்னம் என்பது உயிர் போன்றது. ஜாதக கட்டத்தில் ‘ல’ என ஒரு இடத்தில்
குறிப்பிட்டு இருப்பார்கள். அதுவே லக்னமாகும்.
ஜோதிடத்தில் மொத்தம் 12 லக்னங்கள் உள்ளன. அவை,
1. மேஷ லக்னம்
2. ரிஷப லக்னம்
3. மிதுன லக்னம்
4. கடக லக்னம்
5. சிம்ம லக்னம்
6. கன்னி லக்னம்
9. தனுசு லக்னம்
11. கும்ப லக்னம்
12. மீன லக்னம்
மேலே குறிப்பட்ட லக்னங்களில் கிளிக் செய்வதின் மூலம் அந்த லக்னத்தை
பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
யோகங்கள்
யோகங்கள் மொத்தம் முன்று வகைப்படும். அவை
அமிர்தயோகம்
சித்தயோகம்
மரணயோகம்
பக்ஷங்கள்
சுக்கிலபக்ஷம – வளர்பிறை – அமாவாசை கழித்த மறுநாள் முதல் பௌர்ணமி வரையில் உள்ள 15 நாட்கள்
வளர்பிறை
கிருஷ்ணபக்ஷம் – தேய்பிறை – பௌர்ணமி கழித்த மறுநாள் முதல் அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள்
தேய்பிறை
திதிகள்
1.
பிரதமை
2.
துவிதியை
3.
திரிதியை
4.
சதுர்த்தி
5.
பஞ்சமி
6.
சஷ்டி
7.
சப்தமி
8.
அஷ்டமி
9.
நவமி
10.
தசமி
11.
ஏகாதசி
12.
துவாதசி
13.
திரயோதசி
14.
சதுர்த்தசி
15.
பௌர்ணமி / அமாவாசை
இவற்றில் திவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி இவை எட்டும் வளர்பிறையில் சுப திதிகள்.