- பிரண்டைத் தண்டுகள் – 1 கட்டு
- புளித்த மோர் - ஒரு லிட்டர்
- கோதுமை - ஒரு கிலோ
- கறுப்பு எள் – 100 கிராம்
- கறுப்பு உளுந்து - 100 கிராம்.
செய்முறை
- பிரண்டையின் மேல் உள்ள நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் பிரண்டையை ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊற வைக்கவும்.
- பின் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.
- அனைத்தையும் ஒன்றாக கலந்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
- இந்த சத்துமாவை நாம் சாப்பிடுவதன் மூலம் வாய்வு தொல்லை,கை கால் வலி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.