ஏலக்காயின் பயன்களும் அதன் நன்மைகளும்
ஏலக்காய் இந்திய
உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மசாலா பொருட்களில் இன்றியமையாத
ஒன்றாகும். ஏலக்காய் Elettaria Cardamomum என்ற தாவரவியல் பெயரிலும்,சமஸ்கிருதத்தில் "ஏலா" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஏலக்காயில் இரண்டு
விதமான ஏலக்காய்கள் உள்ளன.ஒன்று கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காய்.இதில்
பச்சை ஏலக்காய்தான் பெரும்பாலும் உபயோகத்தில் உள்ளது,அனைவராலும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது தவிர கலப்படம் இல்லாத இயற்கை ஏலக்காயும் ஆகும்.
கருப்பு ஏலக்காய்
கீர், பிரியாணி போன்ற உணவுகளில்
வாசனை பொருளாக பயன்படுகிறது.அத்துடன் கரம் மசாலா போன்ற மசாலா பொருட்களிலும்
பயன்படுத்தபடுகிறது.
பசியைத்
தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும்
ஏலக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஒன்றாகும்.
ஏலக்காய் ஒரு
மசாலா பொருளாக மட்டும் இல்லாமல் பித்த நீரை அதிகரித்து ஜீரண சக்தியை தூண்டுகிறது.வாந்தி,
வாய்வு தொல்லை போன்றவற்றை
சரியாக்குகிறது.
வயிற்றுவலிக்கு
ஒரு சிறந்த நிவாரணியாக ஏலக்காய் விளங்குகிறது. ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி
செய்து, 2 கிராம் அளவு
பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு
வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி விரைவில் குணமாகும்.
ஏலக்காய்
கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது.தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்
.
கர்ப்ப காலத்தில்
ஏற்படும் குமட்டல், வாந்தி தீர ஏலக்காயின் மேல் தோலை உரித்து,
உள்ளிருக்கும் ஏலரிசியை
நன்கு காய வைத்து, தூள் செய்து
கொள்ள வேண்டும்.நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இதை கலந்து குடிப்பதன் மூலம்
தவிர்க்கலாம்.
ஏலக்காய் உடலின்
வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது.
வாய் துர்நாற்றம்
போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது,மன அழுத்தம் உள்ளவர்கள் ஏலக்காய் டீயைக் குடிப்பதன் மூலம் புத்துணர்வை பெற
முடியும்.
நாவறட்சி,
வாயில் உமிழ்நீர் ஊறுதல்,
வெயிலில் அதிகம்
வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து
ஏலக்காய் நிவாரணம் தருகிறது.
வெயிலில் அதிகம்
அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு
ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை எடுத்து நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால்
தலைசுற்றல் உடனே நின்று விடும்.
வாயுத்
தொல்லையால் அவதிபடுகிறவர்கள், ஏலக்காயை நன்கு
காயவைத்து பொடியாக்கி அரைத்து அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வெறும்
வயிற்றில் இந்த நீரை குடித்து வந்தால் வாயுத்தொல்லை முற்றிலும் சரியாகிவிடும்.