-->

நீங்கள் வேண்டாம் என்று தூக்கி எரியும் கறிவேப்பிலையில் இவ்வளவு நன்மைகளா ?

முடி உதிர்வை போக்கும் கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் 

கறிவேப்பிலை இல்லாத ஒரு உணவே இல்லை என்று கூறலாம்,அந்த அளவிற்கு நம் அன்றாட உணவிலும்,சித்த மருத்துவத்திலும் கறிவேப்பிலையின் பயன்பாடு உள்ளது.

கறிவேப்பிலை தனக்கென்று தனி சுவையும்,மனமும் உள்ள ஒரு தனித்துவமிக்க உணவு பொருளாகும்.இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.கறிவேப்பிலையை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை  பெற முடிகிறது.

கறிவேப்பிலையில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் உணவு உண்ணும்போது உணவில் உள்ள கறிவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டே சாப்பிடுகின்றனர்.இதனால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்களை நாம் இழந்துவிடுகின்றோம்.இது மிகவும் தவறான ஒன்றாகும்.

இவ்வாறு ஒதுக்குவதால் நமக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான சத்துக்களான இரும்புச் சத்து,எலும்புகளை வலுவடைய செய்யும் போலிக் அமிலம் போன்ற பல்வேறு சத்துக்களை நாம் இழந்துவிடுகிறோம்.

கறிவேப்பிலையை மலச்சிக்கல் பிரச்சினையைச் சமாளிக்கக்கூடிய ஒரு மலமிளக்கியாகப் பயன்படுகிறது.கறிவேப்பிலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோயை சரிசெய்ய முடியும்.

கறிவேப்பிலையை நன்கு கழுவி சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி காயவைத்து பொடியாக்கி தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் 1 ஸ்பூன் கறிவேப்பிலை பொடியை சாப்பிட்டு வெந்நீர் குடித்து விட்டு படுத்தால் மலச்சிக்கல் என்ற பிரச்சினையே ஏற்படாது.

கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கத்தைக் குறைக்க முடியும்.
வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

கறிவேப்பிலையின் இலை, வேர், பட்டை, தண்டு மற்றும் பூக்களைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான வலிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

உடல் பருமனால் அவதிபடுபவர்கள்  தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைந்து ஆரோக்கியமான உடலை பெற முடியும்.

கறிவேப்பிலை நாம் தொடர்ந்து உட்கொள்வதின் மூலம் அடர்த்தியான கருமையான கூந்தலை பெற முடியும். கறிவேப்பிலையில் புரதமும் பீட்டா-கரோடினும் வளமையாக உள்ளது. இது முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.


நன்கு சுத்தமான கறிவேப்பிலையை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு சிறுது நேரம் கொதிக்க விடவும். அந்த கறிவேப்பிலையின் சாறு முழுவதுமாக எண்ணெயில் இறங்கி நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.பின் அந்த எண்ணையை ஆறவைத்து வாரத்திற்கு ஒரு முறை அந்த எண்ணெயை தேய்த்து குளித்து வரவும். இவ்வாறு செய்வதன் மூலம் முடி உதிர்வது நின்று நல்ல கருமையான கூந்தலை பெற முடியும்.


Previous Post Next Post