-->

பொடுகு தொல்லையால் அவதிப்படும் உங்களுக்கு வந்துவிட்டது ஒரு நிரந்தர தீர்வு




வெந்தயம்
 பொடுகு தொல்லையால் அவதிபடுகிறவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் காலை நன்கு ஊறிய வெந்தயத்தை பேஸ்ட் போன்று அரைத்து தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.
மிளகு
மிளகினை நன்கு சுத்தம் செய்து நைசாக அரைத்துக் கொள்ளவும்,அரைத்த மிளகு தூளுடன் பால்  சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் நன்கு தலை அலசி விடவும்,இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம்  "பொடுகு தொல்லை நீங்கி அழகான கூந்தலை பெற முடியும். 
பாசிப்பயறு
 2 ஸ்பூன் பாசிப்பயிறு மாவு எடுத்துக் கொள்ளவும் அத்துடன் தயிர் கலந்து தலையில் தேய்த்து  ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை
 கற்றாழை நம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி கொடுக்க கூடியதாகும், கற்றாழையின்  சாற்றை சிறிதளவு எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கி விடும்.. 
வேப்பிலை
 வேப்பிலை கொழுந்து, துளசி இலை,செம்பருத்தி இலை,மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால்  பொடுகுதொல்லை நீங்கும்.
 துளசி
துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம்  ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
மருதாணி
 வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து வந்தால் பொடுகுதொல்லை நீங்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்துசிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் பொடுகு தொல்லை நீங்கி விடும்.
தேங்காய் பால்
 தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலையை  அலசினால் பொடுகு மறைந்து கூந்தல்  பள பளக்கும்.
 முட்டை
முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.
நல்லெண்ணெய்
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.




Previous Post Next Post