பூசணிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
- பூசணிக்காய் துருவல் - 1 கப்
- இட்லி அரிசி - 1 கப்
- சாமை அரிசி - 1 கப்
- உளுத்தம்பருப்பு – 1/4 கப்
- சின்ன வெங்காயம் -10
- காய்ந்த மிளகாய் -7
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி உளுத்தம்பருப்பு, சாமை அரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பூசணிக்காயை நன்கு பூ போன்று துருவி வைத்துக்கொள்ளவும்.
- வாணலையில் எண்ணெயை விட்டு அதில் காய்ந்த மிளகாய் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூசணிக்காய் துருவல்,மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் அந்த கலவையை ஊறவைத்த அரிசி, உளுந்துடன் சேர்த்து நைசாக அறைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவை 7 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- மாவு நன்கு புளித்த பின் தோசைகல்லில் ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான பூசணிக்காய் தோசை ரெடி..