தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 200 கிராம்
- உளுத்தம் பருப்பு - 50 கிராம்
- முருங்கை கீரை - 1 கைப்பிடி
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- உளுத்தம் பருப்புடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- அதில் ராகி மாவை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
- பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- பின்னர் அத்துடன் முருங்கை கீரை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- கலந்து வைத்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி தோசையாக வார்க்கவும்.
- இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.