-->

ஸ்பைசி புதினா சிக்கன் மசாலா - Spicy Pudhina Chicken Masala


தேவையான பொருட்கள்
  1. வெண்ணெய் – 2  ஸ்பூன்
  2. சீரகம் – 1 ஸ்பூன்
  3. சிக்கன் – 1/2 கிலோ
  4. தண்ணீர் தேவையான அளவு
  5. எலுமிச்சை சாறு ½ ஸ்பூன் 
மசாலாவிற்கு
  1. எண்ணெய் தேவையான அளவு 
  2. பட்டை – 1 துண்டு 
  3. சோம்பு – 2 ஸ்பூன்
  4. இஞ்சி – 1 துண்டு
  5. பூண்டு – 4 பல்
  6. வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  7. பச்சை மிளகாய் – 4 பொடியாக நறுக்கியது)
  8. புதினா – 2 கப்

 செய்முறை
  1. புதினாவை நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  4. பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  5.  பின் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து நன்கு வதக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும்.
  6.  பிறகு அதனை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
  7. அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  8. பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.
  9. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  10. வெண்ணெய் மசாலாவிலிருந்து பிரிந்து வரும் நிலையில் சுத்தம் செய்து வைத்துள்ள  சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டவும்.
  11. சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் சிக்கனை வேக வைக்கவும்.
  12. சிக்கன் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வெந்தவுடன் சிறிதளவு எலுமிச்சை சாரு சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஸ்பைசி புதினா சிக்கன் மசாலா ரெடி..



Previous Post Next Post