திணை உணவுகளை சாப்பிடுவதால் வாதம்,பித்தம்,கபம்,போன்றவை நீங்கம்,பசியை உண்டாக்கும்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு - 1 கப்
- தினை அரிசி – 2 கப்
- சின்ன வெங்காயம் – 10
- இஞ்சி - சிறிய துண்டு
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
- தினை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் முதல் நாள் இரவே ஒன்றாகவே ஊறவைத்துவிடவும்.
- மறுநாள் ஊறிய திணை அரிசி பாசிபருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதனுடன் தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
- பின் கலந்து வைத்துள்ள மாவை கனமான தோசைகளாக வார்த்து நன்கு சிவந்த பின் எடுத்து பரிமாறினால் சுவையான திணை அடை ரெடி.