கொவைக்கையின் நன்மைகளும் அதன் பயன்களும்
கோவைக்காய்
முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய்
பற்றுக் கம்பிகள் கொண்ட, படர் கொடி வகையான
தாவரம். கோவைக்காய் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி உடலுக்கு நல்ல சீரான ரத்தத்தை
ஓட்டத்தை உண்டாக்குகிறது.
பித்தம், வாயு ஆகியவை வராமல் தடுத்து நம் உடலை காக்கும்
சிறந்த மருந்தாக பயன்படுகிறது.கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை
கொண்டவையாகும்.
கோவைக்காய்கள்
சதைப் பற்றானவை. நீண்ட முட்டை வடிவமானவை.
நீள் வாக்கில் வெள்ளை நிறமான வரிகள்
கொண்டவை இவை தோல்நோய்களில் இருந்து நம்மை காக்கும் ஆற்றல் கொண்டது.
கோவைக்காய் இலை
இருமல், புண்கள், சிரங்கு, உடல் சூடு, ஆகியவற்றை தடுக்கும் தன்மை கொண்டது.
கோவைக்காய்,
ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
இத்தகைய மருத்துவ குணம் கொண்ட கோவைக்காய் சமவெளிப் பகுதியில் வேலியோரங்களிலும்
புதர்களிலும், பாழ்
நிலங்களிலும் பரவலாக வளர்கின்றன.
நீரிழிவு
நோய்க்கு கோவைக்காய் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.நீரிழிவு நோயாளிகளின்
இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள்
வைத்திருக்க கோவைக்காய் மிகவும் பயன்படுகிறது.
கோவைக்காயில்,
சாம்பார், கூட்டு,அவியல்,பொரியல்,ஊறுகாய்,வத்தல் போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர
வயிற்றுப் புண், வாய்ப்புண்,
உதடு வெடிப்பு ஆகியன
குணமாகும்.
கோவைக்காய்
பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய
கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி,
சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு
கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள்
பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்
கல்லீரலுக்கு
பலம் கொடுத்து கல்லீரல் பழுதடையாமல் பாதுகாக்க கோவைக்காய் மிக சிறந்த மருத்துவ
குனமிகுந்த உணவாகும்.
கோவை இலையின்
சாற்றை பூசும்போது வியர்குரு விலகும், எடையிழப்பு போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால்
ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வாகவும் அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கு
ஏற்படும் அதிகபட்ச வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தவும், சிறுநீர் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தவும்,
வயிறு சார்ந்த செரிமான
பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்துகளுக்கும் பயன்படுத்தப் படுகிறது. எடையிழப்பு
போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வாகவும்
அளிக்கப்படுகிறது.
பச்சையாகவே
கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து
மோருடன் அரைத்து குடிப்பதன் மூலம் வாய்ப்புண் விரைவில் குணமடையும்
.
சுவையின்மை தீர
கோவைக்காயை நறுக்கி காய வைத்து, வற்றலாக்கி
வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். அல்லது கோவைக்காயை ஊறுகாய்
செய்தும் சாப்பிட்டு வரலாம்.
கோவைக்காய் இலை
மற்றும் தண்டு சளியை வெளியேற்றும் இலை, தண்டு, கஷாயம்
மார்புச்சளி, சுவாசக்குழாய்
அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள்,
பிற தோல்நோய்களை
குணப்படுத்த உதவும்.
மூச்சு இரைத்தல்,
வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும்.
கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண்
விரைவில் ஆறும்.
கோவைக்காய்
பித்தம், ரத்தப் பெருக்கு,
வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல
மருந்தாகும்.