தற்போது
நிலவி வரும் பருவ நிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (சூடு)
ஏற்படுகிறது, இதற்க்கு முக்கிய காரணம் சரியான நம் உணவு பழக்கவழக்கம்,அதிக நேரம்
அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது,வெளியில் அதிக நேரம் சுற்றுவது,நம் பாரம்பரிய
உணவுமுறைகளை தவிர்த்து மற்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை வாங்கி உண்பது
போன்றவையே ஆகும்.,
இதனால்
நம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது.இதனால் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.முக்கியமாக
முகப்பரு, தோல்
வியாதிகள், தலை
முடி உதிர்தல்,
வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு நோய்கள்
நம்மை தாக்குகின்றன.
இதனை சரி செய்ய மிகவும் எளிமையான வழி நம் முன்னோர்கள் பின்பற்றிய எண்ணை குளியல் என்பதாகும்.இதற்க்கு தேவையானது நல்லெண்ணெய் ,பூண்டு,மிளகு,நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில்
தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.எண்ணெய் இலேசாக
சூடானவுடன் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில்
சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை
காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து உடனே
காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள்
உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.2 நிமிடத்திற்கு மேல் இதனை
விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை
முயற்சி செய்ய வேண்டாம்.
மிகுந்த
மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள்
இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.நல்லெண்ணெய்
கால் பெருவிரலில் வைப்பதை போல வாரம் ஒரு முறை எண்ணெய் தலைக்கு தேய்த்து குளிப்பதன்
மூலமும் உடல் சூட்டை குறைக்க முடியும்.