உலர் திரட்சை பழத்தின் நன்மைகள்
திராட்சை என்றலே எல்லோருக்கும்
பிடித்தமான ஒன்றாகும்.அத்தகைய திராட்சையில் பல வகைகள் உள்ளன. கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என
பல்வேறு வகைகள் உள்ளன.
உலர் திராட்சையில் உடலுக்கு
வலிமை தரும் பல சத்துக்கள் அடங்கயுள்ளன.உலர் திராட்சை நம் சாப்பிடுவதின் மூலம் நம்
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் நம்மை தாக்காமல்
பாதுகாக்க முடியும்.
ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் 4 முதல் 5 உலர் திரட்சையை உட்கொண்டு
வந்தால் விரைவில் ரத்தசோகை குணமாவதை உணர முடியும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள்
ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த புற்று நோய் வராமல்
தடுக்கிறது..
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள்
தினசரி காலை மாலை என இரண்டு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை
நோய் விரைவில் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் சிறிதளவு
எடுத்து சுத்தம் செய்து நல்ல சுத்தமான பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை
குடித்து வந்தால் மலச்சிக்கல், குடல் இறக்கம் போன்ற வயிறு சம்பந்தமான பல்வேறு
பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
குழந்தைக்கு பால் காய்ச்சும்
போதும் அதில் இரண்டு உலர் திராட்சை பழத்தை நசுக்கிப் போட்டு காய்ச்சிய பின் பாலை
வடிகட்டிக் கொடுத்தால், குழந்தையின் உடல் ஆரோக்கியமாகவும்,கொழு
கொழுவென்று வளருவதையும் பார்க்கலாம்.
உலர் திராட்சைப் பழத்தை மிதமான
வெந்நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க்
கோளாறுகள், மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் ஏற்படும்
வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எலும்புகள் நன்றாக உறுதியாக
வளரவும், பற்கள் வலுப்பெறவும், உடல் வளர்ச்சிக்கும்
தேவையான சத்து கால்சியம்தான். அத்தகைய கால்சியம் சத்து இந்த உலர் திராட்சை பழத்தில்
அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில்
போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள்
ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து
இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து
வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு சாப்பிடும்போது எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம்
சுரக்கும்.
பெருஞ்சீரகத்தோடு இந்த உலர் திராட்சை பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். எடை குறைவாக உள்ளவர்கள் குண்டாக வேண்டும் என்று நினைத்தால் தினசரி இந்த பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வந்தால் நல்ல கட்டான உடல் அமைப்பை பெற முடியும்.
உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்கள் உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் உஷ்ணம் நீங்கி உடல் குளிர்ச்சி அடைவதை காணலாம்.
.