தேவையான பொருட்கள்
செய்முறை:
- வாழைத்தண்டு – 2 பொடியாக நறுக்கியது
- கடுகு – ஒரு டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – ஒன்று
- மோர், தயிர் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை நன்கு சுத்தம் செய்து நார் நீக்கி எடுத்துக் கொள்ளவும் .
- பின்னர் சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் வாழைத்தண்டை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
- பின் அத்துடன் தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும்
- பின் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
- ஆறியவுடன் சிறிது தயிர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தாண்டு மோர் கூட்டு ரெடி.