-->

ஆண் உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்


ஆண் உடம்பில் மச்சம்


உடலில் மச்சம் உள்ள ஆண்கள்


கழுத்தின் வலதுபுறம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு சொத்து சேர்க்கையுடன், ஆடம்பரமான வாழ்க்கை அமையும்.

 கழுத்தின் நடுவே மச்சம் உள்ள ஆண்கள் – இந்த மச்சம் இவர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்காது.

 கழுத்தின் மேல்பக்கம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் புத்திசாலித்தனத்துடன் கூடிய , சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள்.

 கழுத்தின் கீழ்ப்பக்கத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களிடம் சமயோசிதம், புத்திசாலித்தனம் போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது.

 கழுத்தின் பின்பக்கத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்கள்.

 இடது மார்பில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் தீவிர முயற்சி செய்வார்கள்.

 வலது மார்பில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் பிரச்சனை எந்த வகையில் வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

 வயிற்றில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள், மேலும் தகுதிக்கு மீறிய ஆசை கொண்டவர்கள்.

 வயிற்றின் வலதுபக்கத்தில் மச்சம் உள்ள ஆண்கள்  - இவர்களுக்கு வாழ்க்கையில் எந்த குறிகோளும் இருக்காது.

 அடிவயிற்றில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், ஆடம்பரமான வாழ்க்கை அமையும்.

 முதுகில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் நல்ல அறிவாளிகளாக இருப்பார்கள்.

 வலப்பக்கத் தோளில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் தைரியசாலிகளாக இருப்பார்கள்.


Previous Post Next Post