-->

எள்ளு சாதம் செய்வது எப்படி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளு

எள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை கொடுக்கிறது.உடல் எடையை குறைக்க எள் மிகவும் உதவுகிறது .

தேவையான பொருட்கள் 

  1. புழுங்கல் அரிசி - 500 கிராம்
  2. கடுகு - சிறிதளவு 
  3. எள் - 25 கிராம்
  4. நெய் - 100 கிராம்
  5. காய்ந்த மிளகாய் - 4
  6. உளுத்தம் பருப்பு - 50 கிராம்
  7. முந்திரிப் பருப்பு - 20
  8. பெருங்காயத் தூள் - சிறிதளவு 
  9. எலுமிச்சம்பழம் - சிறிதளவு 
  10. கறிவேப்பிலை - சிறிதளவு 
  11. உப்பு - தேவையான அளவு.

 செய்முறை

  1. முதலில் புழுங்கல் சுத்தம் செய்து கழுவி சாதமாக வடித்துக் கொள்ளவும்.
  2. வடித்த சாதத்தை நன்கு ஆறவைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றவும்.
  4. நெய் காய்ந்தவுடன் அதில் எள்ளு,காய்ந்த மிளகாய்,உளுத்தம் பருப்பு,பெருங்கயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
  5. பின் அதே கடாயில் சிறிதளவு கடுகு,முந்திரி,கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து அதில் வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை சேர்க்கவும்.
  6. அத்துடன் நாம் வறுத்து பொடி செய்து வைத்துள்ள எள்ளு பொடியை சேர்க்கவும்.
  7. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வாசனைக்காக சிறிதளவு நெய் ,எலுமிச்சை பழ சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான எள்ளு சாதம் ரெடி.
Previous Post Next Post