-->
உங்களை பற்றிய கனவு பலன்கள்
- நீங்கள் உங்களையே கண்ணாடியில் பார்ப்பது போல் கனவு வந்தால், கூடிய விரைவில் உங்களுக்கு திருமணம் நடைபெறப் போகின்றது என்று அர்த்தம்.
- யாரோ உங்களை அழகுபடுத்துவது போல கனவு வந்தால் நெருங்கிய
நண்பர் நம்பிக்கை துரோகம் செய்ய போகிறார் என்று அர்த்தம்.
- உங்களை யாராவது அவமான படுத்துவது போல கனவு வந்தால்
சிறு பிரச்சனைகளும், துன்பமும் வரபோகிறது என்று அர்த்தம்.
- உங்களுக்கு பிறர் ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால்,உங்களை தவறான வழியில் திசை திருப்புகிறார்கள் என்று அர்த்தம்.
- உங்கள் உடலில் இருந்து இரத்தம் வருவது போன்று கனவு வருவது
உங்களின் திறமை அடையாளம் காணப்பட்டு உங்களுக்கு பேரும்,புகழும், கிடைக்கப்போகிறது என்று பொருள்.
- உங்களுக்கு முன்பின் தெரியாதவரிடம் நீங்கள் பேசுவது
போல் கனவு வந்தால் நீங்கள் மற்றவர்களால் உயர்ந்த நிலையை அடைய போகிறீர்கள் என்று
அர்த்தம்.
- அழகான பெண் உங்கள் கனவில் வந்தால் வாழ்க்கையில்
மகிழ்ச்சி ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கும்.
- ஆசிரியர் கனவில் வருவது உங்கள் வாழ்க்கையில் வளங்கள்
அமோகமாகப் பெருக போவதன் அறிகுறியாகும்.
- ஆசிரியருடன் பேசுவது போலவும், அவரை காண்பது போலவும் கனவு வந்தால் நன்மை ஏற்பட போகிறது என்று
அர்த்தம்.
- அழகாக சிரித்து கொண்டே இருக்கும் குழந்தையை கனவில் காண்பது
உங்களுக்கு பணவரவு உயர போவதன் அறிகுறியாகும்.
- உடன் பிறந்த சகோதரர் உங்கள் கனவில் வருவது
உங்களுக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி தீரப்போகின்றது என்பதன்
அறிகுறியாகும்.
- உடன் பிறந்த சகோதரியை நீங்கள் கனவில் கண்டால் உங்கள்
ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று பொருள்.
- தந்தையைக் கனவில் கண்டால் நீங்கள் பட்ட கஷ்டங்கள்
அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் என்று பொருள்.
- தன்னை தானே அழகுபடுத்திகொள்வது போலக் கனவு வந்தால்
செய்யும் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்று பொருள்.
- நீங்கள் மட்டும் சாப்பிடுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு
துன்பங்கள் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
- நீங்கள் யாரிடமாவது அறிவுரை கூறுவது போல் கனவு கண்டால்
நண்பர்களிம் மனக்கசப்பு தோன்றும் என்று பொருள்.
- நீங்கள் யாரையாவது அவமரியாதை செய்வது போல கனவு வந்தால்
தடைபட்ட காரியங்கள் கைகூடி வரும்.
- நீங்கள் யாரிடமாவது கோபம் அடைவது போல் கனவு வந்தால்
உங்களின் செய்யும் புது முயற்சி தோல்வி அடையப்போகிறது என்று அர்த்தம்.
- அழகான பெண் உங்களை நோக்கி வருவது போல் கனவு கண்டால்
தனலாபம் ஏற்பட போகிறது என்று பொருள்.
- உங்களின் கனவில் மாமியார் வந்தால் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் எல்லாவற்றிலும் செயல்பட வேண்டும் என்று
பொருள்.
- உங்களின் கனவில் மாமனார் வந்தால் உங்களை உற்சாகப்படுத்த ஒரு நல்ல செய்தி வரப்போகிறது
என்பதைக் குறிக்கும்.
- உங்கள் காதலனிடமோ அல்லது காதலியிடமோ காதலை சொல்வது போல கனவு வந்தால் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக
முடிய போகிறது என்று அர்த்தம்.
- முன்னாள் மனைவி அல்லது முன்னாள் காதலியுடன் உடலுறவு கொள்வது போல கனவு கண்டால்,
அந்த உறவு முடிவு பெற போகின்றது என்று பொருள்.
- பெண் கர்ப்பம் ஆவது போல் கனவு கண்டால் வளர்ச்சி அடைய போகிறீர்கள்
என்று அர்த்தம்.
- முன்பின் தெரியாதவர்களிடம் உறவு கொள்வது போல் கனவு வந்தால் உங்கள்
வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டு முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.
- ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களுடன் உறவு கொள்வது போல் கனவு வந்தால் உங்களின்
நட்புக்கு ஆபத்து வரபோகிறது என்று அர்த்தம்.
- முத்தம் கொடுப்பது போல் கனவு வந்தால் ஒரு பிரச்சனை வரப்போகின்றது
என்று அர்த்தம்.
- ஆனால் அடிக்கடி பாலியல் சம்பந்தமான கனவு வந்தால் நீங்கள் ஆசைப்பட்டது
எதுவுமே கிடைக்காது என்று பொருள்.
இவற்றையும் படிக்கலாமே