-->

கனவில் கடவுளை கண்டால் என்ன பலன்

கடவுளை கனவில் கண்டால் என்ன நடக்கும்

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்

1.       கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.
2.       கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம்.
3.       ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
4.       கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
5.       கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
6.       எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும். எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
7.       ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால், வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.
8.       கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று பொருள்.
9.       கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.
10.   கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.
11.   விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
12.   விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
13.   ஏசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
14.   ஏசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம் வரும். ஆனால் அது விரைவில் மாறிவிடும்.
15.   காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
16.   கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.
17.   கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.
18.   கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.
19.   கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.
20.   ஐய்யனார் தெய்வத்தை கனவில் கண்டால் சகல சௌகரியமும் கிட்டும்.
21.   நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக கோவிலுக்கு சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.
22.   விநாயகரை கனவில் கண்டால் உங்களின் எல்லா பிரச்சனையும் முடிந்து விட்டது என்று பொருள்.
23.   யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்தி கடன் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
24.   யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களின் அணைத்து காரியமும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.
25.   முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான தோஷமும் நீங்கிவிட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே நடக்கும்.
26.   அம்பாள்/அம்மனை கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.
27.   அம்பாள்/அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல கனவு வந்தால் எந்த தீமையும் நம்மை அண்டாது என்று அர்த்தம்.
28.   திருநீறு பூசுவது போல கனவு கண்டால் நல்ல ஞானம் பிறக்கும்.
29. கோவிலை கனவில் கண்டால் நன்மையான பலன்கள் ஏற்படபோகிறது  என்று அர்த்தம். 
30. பாழடைந்த கோவிலை கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
31. கோவிலில் இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள் தோன்றும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் நன்மை யாகவே முடியும்.
32. கனவில், ஆலய மணியோசையை கேட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைச் பாக்கியம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும்.

இவற்றையும் படிக்கலாமே




Previous Post Next Post