கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
கன்னி
லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான
சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். எடுக்கும்
காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து அதை முடித்து காட்டுவார்கள். எதையும்
முன்னின்று முடிக்கும் ஆற்றலும் விவேகமும் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
நல்ல பண்பும், பிறர் மெச்சும் நல்ல நடத்தையுள்ளவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள்
செய்யும் செயல்களில் திறமைசாலிகள் என்று பெயர்
எடுப்பார்கள்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் கடின
உழைப்பாளி, ஆதலால் எளிதில் பொன் பொருள் சேர்கை பெற்று பணக்காரர் ஆகிவிடுவார்கள்.
நட்பு வட்டம் அதிகம் கொண்டவர்கள். நிறைய சிந்திக்கும் ஆற்றலும், அதை
செயல்படுத்துவதில் நிறைய சாதூர்யமும் நிறைந்தவர் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் புதன்,சுக்கிரன் நன்றாக இருந்தால் இவர்கள்
தொட்டதெல்லாம் பொன்னாகும். வாழ்க்கை முழுக்க யோகத்த்துடன் வாழ்வார்கள்.
இவர்கள் பெரும்பாலோனோர் சிவந்த மேனியை கொண்டிருப்பர்.இவர்கள் சுறுசுறுப்பான
எண்ணம் கொண்டவர்கள். தனக்கென ஒரு இலட்சியத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்வார்கள்.படிப்பு
விஷயத்தில் கெட்டிகாரர்கள். ஒரு விஷயத்தை பற்றி தெரியவில்லை என்றாலும் அதை கற்று
கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். வியாபாரத்திற்க்கு தேவையான நல்ல தகுதியும்
திறமையும், இவர்களுக்கு இருக்கும். புது புது யுக்திகளை வியாபாரத்தில் புகுத்தி
கொண்டே இருப்பார்கள்.
இவர்களிடம் பேச்சை விட செயலில் அதிக வேகம் இருக்கும். இவர்கள் கணவனாக
இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவனிடமும் மிகுந்த ஆசையும் ஈடுபாடும்
கொண்டவர்களாக இருப்பார்கள். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் இவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடவுள்
சம்பந்தமான பணிகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அயல் நாடுகளுக்கு
செல்லும் யோகம் இவர்களில் பல பேருக்கு உண்டு. உறுதியான மனதை கொண்டவர்களாக
இருப்பார்கள்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்