-->

மச்ச பலன்கள் என்றால் என்ன? ஆண், பெண் மச்ச பலன்கள்

ஆண் பெண் பொதுவான மச்ச பலன்கள்


மச்ச சாஸ்திரம்

நமது முன்னோர்கள் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களை அடிப்படையாக வைத்து பலன்களை சொல்லி இருக்கிறார்கள். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, சுகம், பொன் பொருள் போன்றவை அளவுக்கு அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை மச்சக்காரன் என்பார்கள். கஷ்டப்பட்டு உழைக்காமலேயே இந்த வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கும். அவ்வாறு நமது உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மச்சங்கள் அதிர்ஷ்ட்த்தை வழங்குகின்றன. அந்த மச்சங்கள் எந்த இடத்தில இருந்தால் என்ன அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை மச்ச சாஸ்திரம் என்னும் நூல் விளக்குகிறது.

மச்சம் என்பது அங்க அடையாளம்

மச்சங்கள் என்பது நமது தலையில் இருந்து கால் வரை இருக்கும் தோல் பாகத்தில் சிறு மற்றும் பெரும் கரும்புள்ளிகள் ஆகும். இது ஒரு சிலருக்கு மஞ்சள், நீலம், சிவப்பு, வெள்ளை என பல வண்ணங்களில் இருக்கும். நாம் பிறக்கும்போது இருக்கும் மச்சம் சிறியதாகவும், பெரிதாகவும் ஒரு சிலருக்கு மேலும் பெரிதாகவும் இருக்கும். இவை நாம் இறக்கும் வரை மறையாது என்பதால் அரசாங்க ஆவணங்களில் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது.

எவையெல்லாம் மச்சங்கள்

சிலருக்கு காயங்கள், புண்கள் அம்மை போன்றவைகளால் மச்சங்கள் போன்ற தடங்கல் இருக்கும். ஆனால் அவை உண்மையில் மச்சங்கள் இல்லை. மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே இருந்தாலும் ஒரு சிலருக்கு தீடீரென தோன்றுவதும் உண்டு. ஆனால் அவ்வாறு தோன்றுவது வெகு அரிதாகும்.

மச்ச பலன்கள்


இந்த மச்சங்கள் ஒரு சிலருக்கு பிறக்கும் போதே நற்பலன்களையும், யோகங்களையும் கடைசி வரை கொடுக்கும். ஒரு மச்சம் ஆண் மற்றும் பெண்ணுக்கு ஒரே இடத்தில இருந்தாலும் அதன் பலன்கள் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வேறுபடும். இந்த மச்சங்களை கொண்டு அதன் இருக்கும் இடத்தை கொண்டும் அந்த நபர் எப்படிபட்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆண்களுக்கு உடலின் வலது புறம் உள்ள மச்சங்களை வைத்தும், பெண்களுக்கு உடலின் இடது புறமுள்ள மச்சத்தை வைத்து பலன் காண வேண்டும் என்று மச்ச சாஸ்திரம் நூல் சொல்கிறது. இனி ஆண் மற்றும் பெண்களுக்கு எங்கெங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பின் வரும் தொகுப்புகளில் காணலாம்.

இவற்றையும் படிக்கலமே,










பெண் கால்களில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்


Previous Post Next Post