மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
மேஷ
லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்கள். மேஷ லக்னத்தில்
பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்ராக
இருப்பார்கள். அறிவும் அழகும் பொருந்தியவர்கள். எல்லோராலும் விரும்பப்படும்
மனிதர்களாக இருக்க விரும்புவார்கள். முன்கோபமும்,பிடிவாத
குணமும் அதிகம் இருக்கும்.
பேச்சிலும், நடத்தையிலும் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக இருக்கக்
கூடியவர். எதையும் வேகமாக செய்ய விரும்புவார்கள். ஆனால் விவேகம் குறைவாக இருக்கும்.
இவர்கள் நல்ல கூரிய புத்தியுடைய அறிவாளியாக இருப்பார்கள். இவர்களிடம்
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் இருக்கும். உணர்சிகளை கட்டுபடுத்த கூடியவர்.
இவர்கள் மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய பெரிய இடத்தில் இருப்பார்கள். நிர்வாக
பணிகளில் சிறந்து விளங்குவார்கள்.
இவர்கள் சற்று குண்டான உடல்வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுயகௌரவத்துக்கு,
மிகுந்த முக்கியத்துவம் தருபவர்கள். சுயகௌரவத்தை எதற்காகவும் விட்டு
கொடுக்க மாட்டார்கள். இவர்கள் எப்போதுமே,
புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் சிந்தித்து கொண்டே
இருப்பார்கள். பேச்சில் அதிகாரம் நிறைந்திருக்கும்.
சிறு
வயதில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் சகல வசதி வாய்புகளுடன் வாழ்வார்கள். இவர்கள்
கடுமையான உழைப்பாளிகள். தேவை இல்லாத காரியங்களில் மூக்கை நுழைத்து பிரச்சனையில்
சிக்கி கொள்வார்கள். இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வாழ்க்கை துணை அமையுமா என்பது
சந்தேகமே. இவர்கள் பிறரை நம்பி ஏமாறுவார்கள்.
புதிய விஷயங்களை கற்று கொள்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.
தன்னை அழகுபடுத்திகொள்வதில் மிகுந்த விருப்பமுடையவராக இருப்பர்கள். இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள்.
தான் சொல்வதே சரி சரி என வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள்
இவர்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் தைரியமானவர்கள்
என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்