மிதுன லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
மிதுன லக்னத்தின் அதிபதி புதன்
பகவானவார். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் மாநிறமாக இருப்பார்கள். எப்போதும்
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற மனம் கொண்டவர்கள். இவருக்கு கற்பனை சக்தி அதிகம்
இருக்கும். கணிதத்தில் வல்லவர்களாக
இருப்பார்கள். சிற்றின்பங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். நல்ல கம்பீரமாகவும்,
மிடுக்கான தோற்றமும் கொண்டவராக இருப்பார்கள். கட்டுக்கதைகளில்
நம்பிக்கை இருக்காது. எதையும் அலசி ஆராயும் மனபோக்கு கொண்டவர்கள்.
மிதுன லக்னத்தில்
பிறந்தவர்கள் முகத்தில் புன்சிரிப்பு எப்போதும் இருக்கும். பேச்சு வன்மை அதிகம்
கொண்டவர். எதையும் பேசி பேசியே சாதித்து விடுவார்கள். செல்வம் ஈட்டுவதில் ஆதிக
விருப்பம் கொண்டவர்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். வாழ்கையின்
முற்பகுதியை விட பிற்பகுதி அதிக சிறப்பாக இருக்கும். எல்லா விதமான சுகங்களையும்
அனுபவிக்க வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுறுசுறுப்பான
பேர்விழிகள். எடுக்கும் காரியத்தை முடிக்காமல் விட மாட்டார்கள். ஆனால் இவர்களிடம்
உள்ள குறை எதையும் முழு மூச்சாக செய்ய மாட்டார்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு
கால் என்பது போலதான் இவர்களின் மனநிலை இருக்கும். இதை மட்டும் சரிசெய்து விட்டால்
இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் புகழ்
பெற வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவர்கள். தன் குடும்பம் நன்றாக இருப்பதற்காக
அயராமல் உழைக்கும் உழைப்பாளிகள். சுயகௌரவதிற்க்கு அதிக முக்கியத்துவம்
கொடுப்பார்கள். யாராவது இவர்களை மரியாதை குறைவாக நடத்தினால் பொருத்து கொள்ள
மாட்டார்கள். சமுகத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்கும்.
இவர்கள் சகல வித கலைகளையும் மற்றும்
விஞ்ஞான அறிவையும், பெற்று விளங்குவார்கள். இவர்களுக்கு
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். இவர்களின் வாழக்கை துணை இவர்களின்
எல்லா விஷயத்தையும் ஏற்று கொண்டு செயல்படுவர் என்பது உறுதியில்லை. இவர்கள் சுறுசுறுப்பும்,
புத்திசாலித்தனமும் ஒருசேர கொண்டவர்கள். புதிய
விஷயங்களை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
இவர்கள் உடல் ஆரோக்கியதிற்க்கு அதிக
முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் நல்ல, உடல்வாகையும், உறுதியான மனநிலையையும் பெற்றவராக இருப்பார்கள்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்