-->
நெல்லிக்காய் துவையல்
- பெரிய நெல்லிக்காய் – 10
- காய்ந்த மிளகாய் – 5
- உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 5
- உப்பு - தேவையான அளவு
- கடுகு – ½ ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – 1 கைப்பிடி
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- முதலில் நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை
நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து
அத்துடன் வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து ஆற
வைக்கவும்.
- நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு
அரைக்கவும்.
- அரைத்த பின் ஒரு கடாயில் கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் ரெடி.