பல்வேறு விதமான பறவைகள் கனவில் வந்தால்
1. பொதுவாக பறவைகள் பறப்பதை போல கனவு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.2. பறவைகளின் முட்டைகளை கண்டால் எந்த தொழிலில் கை வைத்தாலும் அது விருத்தியடையும் என்று பொருள்.
3. பறவை தான் குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவது போல கனவு வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
4. இரண்டு புறாக்கள் ஒன்றாக பறப்பது போல் கனவு கண்டால் நண்பர்களிடம் உள்ள நட்பில் விரிசல் விழும் என்று பொருள்.
5. புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவோம் என்று பொருள்.
6. புறா கூட்டத்தை கனவில் கண்டால் சில உறவுகளை பிரிய நேரிடும் என்பதைக் குறிக்கிறது.
8. கருப்பு நிற புறாவை கனவில் காண்பது துக்கமான செய்தி வரும்.
9. புறாவை வேடன் கையில் இருபது போல கனவு வந்தால் நல்லதல்ல.
10. கழுகை கனவில் கண்டால் யாரோ உங்களை கவிழ்த்து விட சதி செய்கிறார்கள் என்று பொருள்.
11. காகம் தலையில் கொத்துவது போல கனவு வந்தால் கெடுதல் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
12. காக்கை பிடித்தது போல கனவு வந்தால் அதிகமான பொறுப்புகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எதிர்கொள்ள நேரிடும்.
13. காக்கை கனவில் காண்பது நல்லதல்ல.
14. காக்கை குளிப்பது போல கனவு வந்தால் நம்மை பிடித்த சனி தோஷம் விலக போகிறது என்று பொருள்.
15. அண்டங்காக்கையை கனவில் கண்டால் நெருங்கிய நண்பர் இறந்து விடுவார்கள்.
16. குயில் கனவில் வந்தால் நம் மனதுக்கு பிடித்தாற்போல் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
17. கருங்குயிலை கனவில் கண்டால் கெட்ட செய்திகள் வரும்.
18. குயில்கள் சண்டை போடுவதை போல கனவு கண்டால் நல்லது அல்ல.
19. கொக்கு கனவில் வந்தால் வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்று பொருள்.
20. கோழி,அதன் குஞ்சுகளோடு இரை தேடுவது போல் கனவு கண்டால், பழைய வீடு, மற்றும் கட்டிடங்களை சீர்செய்யும் நிலை ஏற்படும் என்று பொருள்.
21. சேவல் கூவுவது போல் கனவு கண்டால், மிகப்பெரிய மாற்றங்கள் நம் வாழ்வில் ஏற்பட போகின்றன என்று அர்த்தம்.
22. கோழியையும் சேவலையும் ஒரு சேர கனவில் கண்டால் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
23. தூக்கணாங்குருவி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நல்ல சகுனம்.
24. பொதுவாக பறவைகள் கனவில் வந்தால் நாம் இருக்கும் இடத்தின் சூழ்நிலை மாறப்போவதன் அறிகுறியாகும்.
25. பறவைகளுக்கு தானியம் தூவுவது போல் கனவு வந்தால், காதலில் வெற்றி பெற போகிறோம் என்று பொருள்.
26. பறவைகளைக் கையில் தூக்கி செல்வது போல் கனவில் வந்தால், தேர்வில் வெற்றி பெற போகிறோம் என்று பொருள்.
27. பாடும் பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பொருள்.
28. வாத்து கனவில் வந்தால் நாம் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் என்று பொருள்.
29. அன்னபறவையாய் கனவில் கண்டால் தெய்வ அருள் கிட்டும்.
30. கிளிகளை கனவில் கண்டால் தொழில் விருத்தி அடையும்.
31. கிளிகள் தானியங்களை உண்பது போல கனவு வந்தால் நமக்கு பொருள் சேதம் ஏற்படும் என்று பொருள்.
32. கிளி இறப்பது போல கனவு கண்டால் கடன்கள் சேரும்.
33. வான்கோழி கனவில் வந்தால் நல்லதல்ல, குடும்பத்தில் சோக நிகழ்ச்சி நடைபெறும்.
34. கௌதாரி கனவில் கண்டால் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.
35. மயில் தோகையை விரித்து ஆடுவது போல கனவு கண்டால் மகிழ்ச்சியான செய்தி வரும்.
36. மயில் பறந்து செல்வது போல கனவு கண்டால் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடைபெறும்.
37. ஒரே ஒரு ஆந்தையை கனவில் காண்பது நல்லதல்ல. ஆந்தை கூட்டத்தை பார்த்தால் நல்லது.
38. குருவிகளை கனவில் கண்டால் குடும்பத்தில் கஷ்டங்களும், நோய்களும் நீங்கும்.
39. குருவிகள் ஜோடியாக இருபது போல கனவு வந்தால் நல்ல செய்தி வந்து சேரும்.
40. குருவி கூடு கலைக்கப்படுவது போல கனவு வந்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.
41. பருந்து அல்லது கழுகை கனவில் காண்பது நல்லதல்ல.
42. கழுகு பிணத்தை கொத்தி தின்பது போல கனவு வந்தால் நமக்கு வியாதிகள் வந்து அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அர்த்தம்.
43. வௌவால்களை தனியாகவோ, கூட்டமாகவோ கனவில் காண்பது நல்லது.
44. வௌவால் வீட்டிற்குள் வருவது போல கனவு வந்தால் கெட்ட செய்தி வரும் என்று அர்த்தம்.
45. வௌவால் வீட்டிலிருந்து வெளியே செல்வது போல கனவு வந்தால் நம்முடைய வறுமை நீங்கும் என்று பொருள்.