ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்ரன் பகவானாவார்.
இவர்களில் பெரும்பாலானோர் நல்ல சிவந்த மேனியும், பெரிய முக்கு மற்றும் வாயும், அகலமான தோள்களும், கொண்டவராக இருப்பார்கள். இவர்கள்
கோபக்காரராக இருப்பீர்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ்வதில் விருப்பமுடையவர்கள்.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர்
செல்வச் செழிப்புடன் வாழும் குடும்ப அமைப்பை பெற்றிருப்பார்கள். நல்ல அழகான மனைவியை
அடைந்து சந்தோஷ வாழ்க்கை வாழ்வார்கள். எப்போதும் மன நிம்மதியுடன் வாழ்க்கை வாழ
விரும்புவார்கள். கணக்கில் புலியாக இருப்பார்கள்.
இவர்கள் எல்லோரிடமும் நட்புடன்
இருக்கவே விரும்புவார்கள். எப்பேற்பட்ட மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை பொறுமையாக கையாளகூடியவராக
இருப்பார்கள். ஒளிவு மறைவின்றி, எதிலும் மனம்விட்டு வெளிப்படையாக
இருக்கக்கூடியவர்கள். எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள்.
தன்னை சார்ந்தவர்களும் அவ்வாறே இருக்க விரும்புவார்கள்.
இவர்களின் மனதை புரிந்து கொண்டு
செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. இவர்களுக்கு கலைகளில் அதிக ஆர்வம் இருக்கும். கலை
சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு அதிக ஆதாயம் தரும். தன்னை அழகுபடுத்திகொள்வதில்
அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் பேச்சில் சாமர்த்தியசாலிகள். பேசி பேசியே
மற்றவர்களை மயக்கி விடுவார்கள்.
இவர்கள் சூழல் சிறு
வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். தாரளமாக செலவு செய்ய
விருப்பமுடையவர்கள். இதனால் பணசிக்கலை இவர்களாகவே உண்டாக்கி கொள்வார்கள். இவர்களுக்கு
சிற்றின்ப ஆசை அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகம் கொண்டவர்கள். கம்பீரமான
உடல்வாகை கொண்டவர்கள்.
இவர்கள் குடும்பத்தின் மேல் அதிக ஆசை
கொண்டவர்கள். மனைவியாக இருந்தால் கணவனிடமோ, கணவனாக இருந்தால் மனைவியிடமோ அதிக பற்றுதலுடன்
இருப்பார்கள். இவர்கள் குழந்தைகளிடம் மிகுந்த அன்பும், ஈடுபாடும் கொண்டவர். இவர்கள் உத்தியோகத்தில் இருந்தால் பெரிய பதவிகளை
வகிப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதில் பதட்டபடமாட்டார்கள். இளகிய மனம்
கொண்டவர்கள். நல்ல மனிதர்களுடன் இருக்கவே விரும்புவர். சமுகத்தில் இவர்கள் நல்ல
பெயரும் புகழும் பெறுவீர்கள்.
சமுக மற்றும் குடும்ப கடமைப்
பொறுப்புக்களை தவறாமல் செய்வார்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதுமே,
விசுவாசத்துடன் இருக்கவிரும்புவார்கள். தன்னை
போலவே மற்றவர்களும் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். நல்ல வாழ்கை வாழ
வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்