-->

சாமை வெஜிடேபிள் பிரியாணி செய்வது எப்படி


சாமை உணவின் நன்மைகள்


தேவையான பொருட்கள்
  1.  சாமை அரிசி – ½ கிலோ
  2.  பூண்டு - 2 பல்
  3.  இஞ்சி - ஒரு துண்டு
  4.  பட்டை – 2
  5.  ஏலக்காய் – 2
  6.  பிரியாணி இலை - 1
  7.  லவங்கம் – 3
  8.  காய்கறி (கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ்) - 2 கப்
  9.  பச்சைப் பட்டாணி – 1/4 கப்
  10.  மிளகாய்த் தூள் -  1/4 ஸ்பூன்
  11.  மஞ்சள் தூள் – சிறிதளவு
  12.  எண்ணெய் – தேவையான அளவு
  13.  நெய் – தேவையான அளவு
  14.  கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  15.  புதினா – சிறிதளவு
  16.  முந்திரி – 5
  17.  பெரிய வெங்காயம் – 3
  18.  உப்பு – தேவையான அளவு
  19.  தண்ணீர் - தேவையான அளவு
  20.  தக்காளி – 3
  21.  தயிர் – சிறிதளவு
  22.  எலுமிச்சைப் பழ சாறு  – சிறிதளவு

செய்முறை
  1. முதலில் சாமை அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும்.
  2.  பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற்றவும்.
  3. அத்துடன் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5.  நன்கு வதங்கிய பின்  மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் மற்றும் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறவும்.
  6. அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து கிளறவும்.
  7. பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் ஊறவைத்துள்ள சாமை அரிசியை கழுவி தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
  8. பின்னர் நறுக்கிய புதினா, கொத்தமல்லி தழை தூவி, நெய் விட்டு, முந்திரியைத் தூவி சிறிதளவு எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கினால் சுவையான சத்தான சாமை பிரியாணி ரெடி.

Previous Post Next Post