-->

சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடும் சத்தான திணை பனை வெல்லம் பொங்கல்

சர்க்கரையை கட்டுபடுத்தும் பனை வெல்லம்
தேவையான பொருட்கள்
  1.  தினை அரிசி - 100 கிராம்
  2.  பாசிப்பருப்பு - 20 கிராம்
  3. பனை  வெல்லம் - 200 கிராம்
  4.  நெய்- 100 கிராம்
  5.  முந்திரி - 10
  6.  திராட்சை - 10
  7.  ஏலக்காய் – 5
  8.  தண்ணீர் – தேவையான அளவு
  9.  உப்பு – தேவையான அளவு

செய்முறை
  1.  தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியே வறுத்து சிறிது நேரம்  ஊறவைக்கவும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் ஊறவைத்துள்ள திணை அரிசி மற்றும் பாசிபருப்பை கழுவி தேவையான அளவு தண்ணீர் வைத்து வகை வைக்கவும்.
  3. திணை அரிசியும்,பருப்பும் பொங்கல் பதத்திற்கு வந்ததும் அதில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து கிளறவும்.
  4. அத்துடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
  5. வெல்லம் கரைந்து பொங்கலுடன் கலந்து பதத்திற்கு வந்ததும் அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  6. பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து, பொங்கலில் சேர்த்து சிறிதளவு நெய் மேலே ஊற்றி இறக்கினால் சுவையான திணை சர்க்கரை பொங்கல் ரெடி.

Previous Post Next Post