-->

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்


தனுசு லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகள் மற்றும் விவேகம் மிக்கவர்கள். இவர்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து பொருள் ஈட்டுவார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் செல்வச் செழிப்பு அதிகம் பெற்று இருப்பார்கள்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் தாராள மனது கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவராவும், துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். புகழ்ச்சியில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். ஆலய மற்றும் பொது ஸ்தாபனங்களுக்கு  பொது ஸ்தாபனங்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வார்கள்.

பழைமையான விஷயங்களிலும், வேதம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். வீண் பகட்டு இவர்களிடம் இருக்காது. பிறரிடம் உண்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.

நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனிதாபிமானத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இவர்களால் இவர்களின் சகோதர, சகோதரிகள் தான் பயனடைவார்களோ தவிர அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை. உறவினர்கள் இவர்களை மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்து கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அவைகளை வாழ்கையின் ஒரு அங்கமாக ஏற்று கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.

இவர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாகலாம். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் மட்டும் எதையும் சொல்ல கூடாது. தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பார்கள். ஆனால் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


Previous Post Next Post