-->

தொப்பையை குறைக்க உதவும் சுரைக்காய் தயிர் பச்சடி


தொப்பையை குறைக்கும் சுரைக்காய்

நம் உடலின் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்கு சுரைக்காய் பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்
  1. சுரைக்காய் – ½ கிலோ
  2. பெரிய வெங்காயம் - 2
  3. தயிர் - 1 கப்
  4. காய்ந்த மிளகாய் - 4
  5. கறிவேப்பிலை – சிறிதளவு
  6. உப்பு – தேவையான அளவு

 தாளிக்க
  1. கடுகு - சிறிதளவு
  2. கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
  3. எண்ணெய் – தேவையான அளவு

 மேல் பொடி
  1. இஞ்சி – 1 துண்டு
  2. பூண்டு - 5 பல்
  3. சீரகம் - 1 ஸ்பூன்
  4. மிளகு – 1 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை - சிறிதளவு

 செய்முறை
  1. முதலில் சுரைக்காயை தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2.  பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்..
  3.  பின்னர் ஒரு கடாயில் இஞ்சி,பூண்டு,சீரகம்,மிளகு,கறிவேப்பிலை அனைத்தையும் மிதமான சூட்டில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
  4.  அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
  5.  பின் வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6.  வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும்..
  7.  அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து,உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.
  8.  ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
  9.  அடித்த தயிரில் பொடி செய்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும்.
  10.  அடுத்து அதில் வேக வைத்த சுரைக்காயை  சேர்க்கவும்..
  11.  தயிர் கலவையுடன் சுரைக்காயை நன்கு கலந்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவினால் சத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி.




Previous Post Next Post