-->
- வாத்துக்கறி –
½ கிலோ
- எண்ணெய் –
தேவையான அளவு
- மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
- உப்பு –தேவையான அளவு
- தயிர் – ½
கப்
- இஞ்சி பூண்டு
விழுது - 1 டீஸ்பூன்
- தாளிக்க:
- காய்ந்த மிளகாய்
- 4
- மிளகு - 1/2 டீஸ்பூன
- பூண்டு பல் - 6
- கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க :
- காய்ந்த மிளகாய்
- 2
- மிளகு - 6
- தனியா தூள் - 1 டீஸ்பூன்
- சீரகம் – ½ டீஸ்பூன்
செய்முறை:
- வாத்துக் கறியை
சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- சுத்தம் செய்த வாத்துக்கறியுடன்
சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு
விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும்.
- பின்னர் வாணலியில்
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் வறுத்து
எடுக்கவும்.
- வறுத்த பொருட்களை
எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற
வைத்திருக்கும் கறி துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக
வைக்க வேண்டும்.
- மற்றொரு
வாணலியில் 3 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் தாளித்தவற்றை
வேக வைத்த வாத்துக் கறியுடன் சேர்த்து சிறிதளவு மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை
சேர்த்து பிரட்டி இறக்கினால் சுவையான வாத்து பெப்பர் ரோஸ்ட் ரெடி..