-->
தேவையான பொருட்கள்
- சிக்கன் – 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )
- கொத்தமல்லி தழை – சிரிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- மைதா – 3 கப்
- உப்பு - தேவையான அளவு
- பச்சை மிளகாய் - 4
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- வேகவைத்த பட்டாணி – ½ கப்
- பெரிய வெங்காயம் – 1
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில்
தேவையான அளவு மைதாவை எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிக்கனை
நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது வெந்த சிக்கனை வேறு
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு
எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம்
மசாலா, உப்பு சேர்க்கவும்.
- பின்னர் பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், மல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- சப்பாத்தி தேய்க்கும் பலகையில்
சிறிது மைதா மாவு தூவி மாவை வட்டமாக பரத்தவும்.
- பின்னர் ஒரு கத்தி கொண்டு அதனை
அரை வட்டமாக வெட்டி அதில் இன்னும் கூட தேவையான அளவு மைதா மாவை தூவி நீள வாக்கில்
ரிப்பன் போல நன்கு தேய்க்கவும்.
- இருக்கின்ற எல்லா மாவையும் இதே
போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
- இப்போது சப்பாத்திக் கல்லை
அடுப்பில் வைத்து தேய்த்த மாவை அதிகம் வாட்டாமல் நொடியில் வாட்டி எடுத்துக்
கொள்ளவும். அப்போது தான் மொறுமொறுப்பாக
சுருட்ட வரும்..
- பின் அதனை சமோசா வடிவில்
மடித்து அதில் சிறிது மசாலாவை வைத்து ஒட்டி விடவும்.
- சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொரித்து
எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா ரெடி.