-->

எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு ?

வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்ததாகும். அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திங்கட்கிழமை சிவனை வழிபடுவது நல்லது

திங்கள்
திங்கட்கிழமை ஈசனுக்கு சோமவார விரதம் இருப்பது நல்லது.திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினங்களுள் ஒன்றாகும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சோமவாரத்தில் விரதம் இருந்தால் மிகுந்த  நற்பலன்களை பெறலாம். பலன்கள்: திங்கட்கிழமை விரதம் இருந்தால் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திங்கள் நீலகண்டனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. திங்களன்று சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரை படைத்திடலாம்.
முருகபெருமனை வழிபட சிறந்த நாள் செவ்வாய் கிழமை ஆகும்
செவ்வாய்
ஹனுமரை செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து வழிபடலாம். மேலும், துர்க்கை அம்மனுக்கும் மிகவும் உகந்த நாளாகும். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று கந்தக் கடவுளை வழிபடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை விரதம்  இருந்தால் கடன் பிரச்சனை தீரும். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.
விநாயகரை வணங்கிய பின் தான் மட்டற்ற கடவுளை வணங்க வேண்டும்
புதன்
விநாயகரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. புதன்கிழமை விரதம் இருந்தால் கல்வி, புகழ், செல்வம் கிடைக்கும். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கி விட்டுதான் தொடங்கவேண்டும்.
தட்சணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லதாகும்.
வியாழன்
விஷ்ணு பகவானை பொதுவாக வியாழக்கிழமை அன்று விரதமிருந்து வழிபடுவார்கள். விஷ்ணு பகவானின் மனைவியான லக்ஷ்மி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாள். வியாழக்கிழமை நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.அதேபோல வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தி வழிபட உகந்த நாளாகும்.
பெண்கள் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட வேண்டிய நாள்
வெள்ளி
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள்.துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
சனியின் பார்வையிலிருந்து தப்பிக்க சனீஸ்வரனை வழிபடும் நாள்
சனி
சனிக்கிழமை சனி கிரகத்தை சார்ந்ததாகும். சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து  வழிபடுவது சிறப்பாகும். சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.  சனிக்கிழமைகளில் விரதமிருந்து சனி பகவான், பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் காளி தேவியை வழிபடலாம்.
ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம்.நவகிரகத்தின் முதன்மையான கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும் என நம்பப்படுகிறது.


Previous Post Next Post