-->

கண் திருஷ்டி நீங்க செய்ய வேண்டிய எளிய வழி முறைகள்

கண் திருஷ்டியை போக்கும் எளிய வழி முறைகள்  


‘கண் திருஷ்டி' என்பது , மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறமை படுவதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பதாகும்.’கல்லடி பட்டாலும் படலம் கண்ணடி படக் கூடாது’ என்று பெரியவர்கள் கூறுவார்கள் .அது முற்றிலும் உண்மையாகும்.

நாள் முழுவதும் உழைப்பைக் கொட்டினாலும் அதற்கான பலன் கிடைக்காமல் ஆரம்பித்த இடத்திலேயே நம்மை கொண்டு வந்து தள்ளி விடும்.நம் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் நம்மை பார்த்து அய்யோ எப்படி இருந்தா இவன் இப்போ இப்படி வளந்துட்டனே என்று நினைக்கும் எண்ணமே நம்மை வீழ்த்திவிடும்.

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு என ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும்.

கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, உடல் நலமின்மை, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும்.

திரிஷ்டி கழிப்பதின் மூலம் இத்தகைய பிரச்னையை தவிர்க்கலாம்.திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி உள்ளவரை விட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதில் திருஷ்டி கழிப்பது உகந்ததாகும்.

திருஷ்டி கழிப்பதில் பல வகைகள் உண்டு அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


சுப நிகழ்ச்சிகளில் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்தல்
ஆரத்தி எடுத்தல்
விசேஷ வைபவங்கள்,திருமணம்,சீமந்தம்,குழந்தை பேரு போன்ற  சுபநிகழ்வுகளிலும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள்,மணமக்கள் முதல் முதலாக புகுந்த வீட்டிற்கு வரும்போது ஆரத்தி எடுப்பார்கள்.நிறை மாதம் அடைந்த பெண்ணுக்கு சீமந்தம் செய்து நிகழ்ச்சி முடிவில் 3 பேர் அல்லது 5 பேர் சேர்ந்து ஆரத்தி எடுப்பார்கள்.குழந்தை பிறந்து முதன் முதலாக வீட்டிற்கு வரும் தாய்க்கும் சேய்க்கும் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள். ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

கல்யாண வீட்டில் வாழை மரம் காட்டுவதின் மூலம் திருஷ்டி கழித்தல்
வாழை மரம்
விசேஷ வைபவங்களின் போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டு வாசலில் சிறிது தண்ணீர் வைத்து அதில் பூக்களை மிதக்க விடுதல்
மலர்கள்
வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது

கல் உப்பு போட்ட தண்ணீரில் குளிப்பதன் மூலம் திருஷ்டி கழித்தல்
உப்புக்குளியல்
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

படிகரத்தை சுற்றி முச்சந்தியில் போடுவதின் மூலம் திருஷ்டி கழிப்பது
படிகாரம்
திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை படிகாரம் கொண்டு சுற்றவேண்டும். தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்திடுங்கள். படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அந்த நீரை பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற்ற வேண்டும்.

எலுமிச்சை பழத்தை சுற்றி போடுவதின் மூலம் திருஷ்டி கழித்தல்
எலுமிச்சம்பழம்
வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீரை வீடு முழுவதும் தெளித்து திருஷ்டி கழித்தல்
கடல் நீர்
வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

ஒரு பிடி உப்பை எடுத்து சுத்தி போடுதல்
உப்பு
கைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து,தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில் போட வேண்டும்.

மண் ,கடுகு,உப்பு,மிளகாய்,தலை முடி   வைத்து சுத்தி போடுதல்
மண்
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய்,தலை முடி  எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.

பூசணிக்காயில் கற்பூரம் வைத்து சுற்றி உடைத்தல்
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் மேல் பகுதியின் ஒரு துண்டை வெட்டி எடுத்து அதனுள் மஞ்சள்,குங்குமம்,கொஞ்சம் சில்லறை காசுகள் போட்டு அந்த வெட்டி எடுத்த துண்டை மேலே வைத்து மூடி விட வேண்டும்.பின் அந்த பூசணிக்காயின் மீது கற்பூரத்தை வைத்து ஏற்றி குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து வலமிருந்து இடமாக,பின் இடமிருந்து வலமாக சுற்றி வாசலில் உடைத்து விட வேண்டும். பூசணிக்காய் உடைந்து சிதறுவது போல குடும்பத்தின் மீது உள்ள திருஷ்டியும் சிதறி விடும்.குறிப்பாக அமாவசை தினத்தன்று செய்வது மிகவும் சிறந்ததாகும்.

மற்றவர்கள் பார்க்கும் இடத்தில் தண்ணீரை வைப்பது
தண்ணீர்
நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தால் பொறாமைப்பட்டால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

தேங்காயில் கற்பூரம் வைத்து சுத்தி உடைப்பது
தேங்காய்
திருஷ்டி கழிப்பதற்கு தேங்காயில் கற்பூரத்தை வைத்து திருஷ்டி கழிப்பவரை உட்கார வைத்து மூன்று முறை இடமிருந்து வலமாகவும்,மூன்று முறை வலமிருந்து இடமாகவும் சுற்றி பின் கற்பூரத்தை வீட்டு வாசலில் வைத்து விட்டு தேங்காயை உடைத்து விட வேண்டும். தேங்காய் சில்லு சில்லாக உடைந்து சிதறுவது போல கண் திருஷ்டியும் கழிந்து விடும் என்பது நம்பிக்கை.


Previous Post Next Post