கும்ப லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
கும்ப லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இவர்களில் பெரும்பாலோனோர்
சற்று உயரமாக இருப்பார்கள். நல்ல கவர்ச்சியான, கம்பீரமான
தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம்
கொடுப்பவர்கள். இவர்கள் பிறரிடம் அவ்வளவு எளிதில் பழக மாட்டார்கள். பெரும்பாலும்
பிடிக்காதவர்களிடம் விலகியே இருப்பார்கள். அவர்கள் மூலம் எந்த உயர்வு வந்தாலும்
ஏற்று கொள்ள மாட்டார்கள். உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். நண்பர்கள் மற்றும்
உறவினர்களிடமிருந்து, உங்களுக்கு எதிர்ப்பு இருக்கும்.
கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த விஷத்தையும் அலசி ஆராயாமல் ஒரு முடிவுக்கு
வரமாட்டார்கள். இவர்கள் அமைதி பேர்விழிகள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று
இருக்க கூடியவர்கள். பல்வேறு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் எதையும்
வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள். எந்நேரமும் சதா சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள்.
வாழ்வில் வெற்றி பெற தேவையான வழி வகைகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் உதவி செய்யும் விருப்பம் கொண்டவர்கள். அதிக நினைவாற்றல் கொண்டவர்கள்.
எண்ணங்களை செயலக்க கடுமையாக உழைக்க கூடியவர்கள். எதையும் ஒளிவு மறைவின்றி
பேசக்கூடியவர்வர்கள்.
இவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
அந்த சமயத்தில் உங்களுக்கு செல்வச் செழிப்பும், சொத்துக்கள்
வசதியும் கிடைக்கும். மிக கடுமையான உழைப்பாளிகள். எதையும் பார்த்த மாத்திரத்தில்
கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். எப்பேற்பட்ட
கஷ்டம் வந்தாலும் அதை முகத்தில் காட்டி கொள்ள மாட்டார்கள். எதுவுமே நடக்காதது போல
அமைதியாக இருக்க கூடியவர்கள்.
விளையாட்டுத் சம்பந்தபட்ட துறையில், இவர்களுக்கு
அதிக விருப்பம் இருக்கும். இவர்கள் பார்பதற்கு சாதரணமாக தெரிந்தாலும் வலுவான
உடற்கட்டை கொண்டவர்கள். பணத்தை சேர்ப்பதிலும், செலவலிப்பதிலும் மிகுந்த கவனமாக இருப்பார்கள். இவர்கள் தான் கொண்ட எண்ணங்களிலும் செயல்களிலும், மிகுந்த
உறுதியுடன் இருப்பார்கள். உங்களை போலவே மனநிலை கொண்ட ஒருவரையே வாழக்கை துணையாக்க
விரும்புவீர்கள்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்