-->

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்


மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகர லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். எல்லா விதமான கலைகளிலும் ஆர்வமுடன் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஒல்லியான உடல் அமைப்பை கொண்டிருப்பார்கள். திடமான மனம் உள்ளவர்கள். கடினமாக உழைக்ககூடியவர்கள். போதும் என்ற மனதுக்கு சொந்தகாரர்களாக இருப்பார்கள். பாடுபட்டு பணத்தை சேர்க்க கூடியவர்கள். சுயநலம் அதிகம் கொண்டவர்கள்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் உடலில் ஏதாவது ஒரு ஆராக்கிய பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் தனிமையை அதிகம் விரும்புவார்கள். தனக்கு சரியென்று பட்டதை செய்ய கூடியவர்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். கொண்ட கொள்கையில் எள்ளளவும் ஊக்கம் குறையாமலும், தோற்றால் நம்பிக்கை இழக்காமலும் எடுத்த காரியத்தை தொடர்ந்து முடித்து காட்டுவார்கள். உடன் பிறந்தோர்களிடம் பாசம் அதிகம் இருக்கும். ஆனால் அதை வெளிகாட்ட மாட்டார்கள். இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்ட இருப்பார்கள். அதுவே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும். மனதில் தேவையில்லாத ஒன்றை போட்டு குழப்பி கொள்வார்கள்.

கல்வியறிவு குறைவாக் இருந்தாலும் அனுபவ அறிவு அதிகம் கொண்டவர்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்க கூடியவர்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் அதை வெளி காட்ட மாட்டார்கள். வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள்.

இவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் இவர்கள் வாழக்கை தரம் நன்றாக இருக்கும். இவர்கள் எந்த வேலையையும் பொறுமையாகவே செய்வார்கள், ஆனால் சரியாக செய்வார்கள். ரகசியம் காப்பதில் கெட்டிகாரர்கள். இவர்கள் மிகவும் முன் ஜாக்கிரதை காரர்களாக விளங்குவார்கள். வருங்காலத்திற்க்கு தேவையான திட்டங்களில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

எந்த இடர்பாடு வந்தாலும் அவைகளை கண்டு இவர்கள் அஞ்சுவதில்லை. இவர்கள் அனுபவ அறிவாளி. இவர்கள் தங்கள் திட்டங்களை சாமர்த்தியமாக செயல்படுத்துவார்கள். இவர்கள் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்கள். தன் கஷ்ட காலங்களில் உதவியவரை ஒருநாளும் மறவாதவர்கள். மகர லக்னத்தில் பிறந்தவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள்.

மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Previous Post Next Post