திணையில் நம் உடலுக்கு தேவையான புரத சத்துக்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- திணை அரிசி – ½ கப்
- கம்பு – ¼ கப்
- இட்லி அரிசி – ¼ கப்
- உளுந்து - ¼ கப்
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- வெந்தயம் – ¼ ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் – சிறிதளவு
- சீரகம் – 2 ஸ்பூன்
செய்முறை
- முதலில் திணை அரிசி, இட்லி அரிசி, கம்பு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரையில் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஊறவைத்த அனைத்தையும் அரைத்து சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்க வைக்கவும்..
- ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து மாவில் கலக்கவும்.
- பின்னர் பணியாரச் சட்டியில் நெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை பணியாற குழியில் ஊற்றவும்.
- பின் இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நெய் ஊற்றி எடுத்து பரிமாறினால் சுவையான கம்பு திணை பனியாரம் ரெடி.