லக்ஷ்மி கடாட்சம் உங்கள் வீட்டில் எப்போதும் இருக்க இதைச் செய்யுங்கள்
உலகிலுள்ள
அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம்,
தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் நமக்கு வழங்குபவள்
அந்த மகாலட்சுமியே.
மஹா விஷ்ணுவின் நெஞ்சில்
குடி இருப்பவள் மகாலட்சுமி ஆவாள். மகாலஷ்மி மகாவிஷ்ணுவுக்கு பிடித்த துளசியின் அம்சமாவாள்.
மகாலட்சுமி
தாமரைப் பூவில் வாசம் செய்பவள். லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும்
சாமந்திப்பூவாகும். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று
கூறுவார்கள். இதனால் தான் கோவில்களில்
காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
மகாலட்சுமி நம்
வீட்டில் வந்து நம்மை ஆசிர்வதிக்க வேண்டுமென்றால் அது நம் வீட்டு பெண்களால் தான்
முடியும், ஏன் என்றால் பெண்களே அந்த மகாலக்ஷ்மியின் அம்சமாக திகழ்கிறார்கள்.
அந்த
மகாலக்ஷ்மியை வரவேற்க நாம் பிரம்ம முகூர்த்த நேரம் என்ற கூறப்படும் அதிகாலை
நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். ஆதலால் அப்போது நாம் உறங்கக் கூடாது.
காலையில்
எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். வீட்டு வாசலில் சாணம்
தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின்
அருள் கிடைக்கும்.
பெண்கள் நெற்றியில்
எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும்
சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக்
கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமை
அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும்
கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.
வீட்டில் துளசி
மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும்
கிடைக்கும. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம்
செய்கிறாள்.
தலைமுடியின் முன்
வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம்
இட்டுக் கொள்கின்றனர். மஞ்சள் குங்குமம் மிகவும் மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்தாகவும் கருத்தப்படுகிறது.
குபேரனிடம்
செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற
பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
மகாவிஷ்ணுவுடன்
இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள் தான். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது
தனிக் கோவிவிலோ இருக்கும் போது நான்கு கரங்களுடன் காட்சி தருவாள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள்.
பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
வரலட்சுமி விரத
பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமியை வழிபாட்டால் நீண்ட
ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். எட்டு விதமான செல்வங்களை
தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.
இதனால் தான் மணமான
பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். வீடுகளில்
லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும்.
வரலட்சுமி விரதம்
இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
இனிப்பு
பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு
உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். எனவே லக்ஷ்மிக்கு
நெய்வேத்தியம் வைக்கும் போது இனிப்பு வைப்பது சிறந்தது.
பாற்கடலில்
பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக
போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது
என்பார்கள்.
வில்வமரத்தில்
லட்சுமி வசிப்பதால், அதற்கு 'லட்சுமி வாசம்' என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக
நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில்
லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை
மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை
ஏற்றி வழிபட்டால், அந்த வீட்டில்
லட்சுமி வாசம் செய்வாள். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம்
கைகூடும் என்பது நம்பிக்கை.