தேவையான பொருட்கள்
- வஞ்சிரம் மீன் – 5
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது )
- கறிவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி தழை - சிறிதளவு
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தேங்காய் பால் – சிறிதளவு
- வாழை இலை – 1
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை
- முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள்,மிளகாய்,தூள்,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
- மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும் .
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வதங்கியவுடன் கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய பூண்டு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு,சேர்த்து வதக்கவும்.
- பின் வதங்கிய மசாலாவுடன் சிறிதளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும்.
- பிறகு வதங்கிய தேங்காய்பால் மசாலாவை சிறிதளவு எடுத்து ஒரு வாழை இலையில் வைக்கவும்.
- அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டை வைக்கவும் .
- பின்னர் அதன் மீது சிறிதளவு மசாலாவை வைக்கவும்.
- வாழை இலையில் வைத்த பின்னர் இலையை நன்றாக மடித்து வாழை நாரினை கொண்டு கட்டவும்.
- பின்னர் அதனை தோசைக்கல்லில் வைத்து வறுத்து வைத்து எடுத்தால் சுவையான வாழை இலை வறுத்த மீன் ரெடி.